மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு கொலை மிரட்டல் விடுத்து இரண்டு டெலிபோன் அழைப்புகள் வந்ததாக அமைச்சரின் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் அலுலவகம் இயங்கிவருகிறது. இந்த அலுவலகத்துக்கு சனிக்கிழமை காலை இரண்டு முறை கொலை மிரட்டல் அழைப்புகள் வந்துள்ளன.

அலுவலகத்தில் உள்ள லேண்ட்லைன் எண்ணுக்கு காலை 11.30 மணிக்கும் 11.40 மணிக்கும் இரண்டு அழைப்புகள் வந்தன என்று அமைச்சரின் அலுலவகம் தரப்பில் சொல்லப்படுகிறது.

மேலும், போனில் பேசியவர் அமைச்சர் நிதின் கட்கரிக்கு கொலை மிரட்டல் விடுத்து ரூ.100 கோடி வேண்டும் என்று கேட்டதாகவும் தனது பெயர் ‘தாவூர்’ என்று சொல்லிக்கொண்டவதாகவும் அமைச்சரின் அலுவலகம் கூறுகிறது. இது தொடர்பாக நாக்பூர் போலீசார் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

Scroll to load tweet…

மாணவிகளுக்கு மாதவிடாய் விடுப்பு: கேரள பல்கலைக்கழகம் அறிவிப்பு!

இதனால், அமைச்சர் நிதின் கட்கரிக்கு வழங்கப்பட்டுவரும் பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது. அவரது அலுலவகத்தைச் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.

மிரட்டல் அழைப்பு கர்நாடக மாநிலத்திலிருந்து வந்துள்ளதாகவும் காவல்துறையினர் விசாரணையில் தெரிந்திருக்கிறது. தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.