மாணவிகளுக்கு மாதவிடாய் விடுப்பு: கேரள பல்கலைக்கழகம் அறிவிப்பு!

கொச்சியில் உள்ள அறிவியல் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் படிக்கும் பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் விடுப்பு வழங்க பல்கலைக்கழக நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

Kerala University Students to Get Menstruation Benefit, Know the Rare Attendance Relief

கேரள மாநிலம் கொச்சியில் உள்ள அறிவியல் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் மாணவிகள் நீண்ட காலமாக மாதவிடாய் விடுப்பு கோரிவந்தனர். இந்நிலையில் அவர்களில் கோரிக்கையை ஏற்று பல்கலைக்கழக நிர்வாகம் 2% வருகை பதிவு தளர்வு அளிக்க முடிவு செய்துள்ளது.

பல்கலைக்கழக மாணவர்கள் குறைந்தது 75 சதவீதம் வருகை பதிவு இருந்தால்தான் செமஸ்டர் தேர்வுகளை எழுத முடியும். மாதவிடாய் விடுப்பு வழங்கப்படுவதால் இந்த வருகைப் பதிவு நிர்ணயத்தில் 2 சதவீதம் தளர்வு அளிக்க பல்கலைக்கழக நிர்வாகம் ஒப்புக்கொண்டிருக்கிறது.

இதன் மூலம் அந்தப் பல்கலைக்கழகத்தில் படிக்கும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகளின் கோரிக்கை நிறைவேறியுள்ளது. பல்கலைக்கழக நிர்வாகத்தின் முடிவை வரவேற்றிருக்கும் மாணவர் சங்க தலைவர் நமீதா ஜார்ஜ் கூறுகையில், “உயர்கல்வித் துறையில் எடுக்கப்பட்ட முக்கிய வாய்ந்த முடிவு இது. மிகவும் தேவையானதும்கூட” என்றார்.

50 சீட் போச்சு.! 2019 மேஜிக் 2024ல் நடக்காது, ஆனால்.? காங்கிரஸ் எம்பி சசி தரூர் கிளப்பிய சர்ச்சை

பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் விடுப்பு வழங்குவது போல மாதவிடாய் நாட்களிலும் விடுப்பு வழங்குவது ஜப்பான், தென் கொரியா, தைவான், இந்தோனேசியா, ஜாம்பியா, ஸ்பெயின் போன்ற நாடுகளில் நடைமுறையில் உள்ளது.

இந்தியாவில்கூட பைஜூஸ், சோமேட்டோ, ஸ்விக்கி, மாத்ருபூமி போன்ற் தனியார் நிறுவனங்களில் மாதவிடாய் விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios