திருவனந்தபுரத்தில் வேலைவாய்ப்பு மேளாவை மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தொடங்கி வைத்தார்

மத்திய அரசின் துறைகள், மாநில அரசுகள், யூனியன் பிரதேச அரசுகளின் துறைகளில் பணி நியமனங்கள் மேற்கொள்ளும் பொருட்டு, நாடு முழுவதும் 43 இடங்களில் வேலைவாய்ப்பு மேளாவை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

 RozgarMela எனும் இந்த முயற்சியின் முதற்கட்டமாக புதிதாகப் பணிகளில் சேர்க்கப்பட்ட சுமார் 70,000 பேருக்கு பணி நியமனங்கள் வழங்கி வேலைவாய்ப்பு மேளாவை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக, அந்தந்த மாநிலங்களில் மத்திய அரசின் இந்த திட்டம் தொடங்கப்பட்டது.

அந்த வகையில், கேரள மாநில திருவனந்தபுரத்தில் உள்ள ரயில் பவனில் வேலைவாய்ப்பு மேளாவை மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர், மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

Scroll to load tweet…

வேலைவாய்ப்பு மேளாவின் கீழ், புதிதாகப் பணியில் சேர்க்கப்படுபவர்கள் நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசுப் பணி அமர்த்தப்படுவார்கள். நிதிச்சேவைத் துறை, அஞ்சல்துறை, பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை, பாதுகாப்பு அமைச்சகம், வருவாய்த்துறை, சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம், அணுசக்தித்துறை, ரயில்வே அமைச்சகம், கணக்கு மற்றும் தணிக்கைத்துறை, உள்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தப் பணி நியமனங்கள் மேற்கொள்ளப்படும்.

மோடி அரசு குறித்து ஜாக் டோர்சியின் விமர்சனம் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் திட்டமா?

வேலை உருவாக்கம் என்னும் பிரதமரின் முன்னுரிமைத் திட்டத்தை நிறைவேற்றுவதன் ஒரு படியாக இந்த வேலைவாய்ப்பு மேளா நடத்தப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. புதிதாகப் பணியில் சேர்க்கப்பட்டுள்ளவர்கள் ஆன்லைன் தளமான கர்மயோகி பிராரம்ப் மூலம் தங்களுக்குத் தாங்களே பயிற்சி பெற்றுக்கொள்ளும் வாய்ப்பைப் பெறுவார்கள். இந்த ஐ-காட் கர்மயோகி தளத்தில் 400-க்கும் மேற்பட்ட ஈ கற்றல் வகுப்புகள் உள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.