Union minister brakes the clean india system
பிரதமர் மோடி நாட்டை சுத்தமாக, சுகாதாரமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக ‘தூய்மை இந்தியா’(ஸ்வாச் பாரத்) திட்டத்தை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறார்.
ஆனால், அவரின் அமைச்சரவையில் இடம் பெற்ற முக்கிய அமைச்சர் ஒருவரோ பொது சுவற்றை ‘நாறடிக்கும்’ வகையில் சிறுநீர் கழித்து திட்டத்தையே காற்றில் பறக்கவிட்டுள்ளார்.
தூய்மை இந்தியா
பிரதமர் மோடி பதவிக்க வந்தவுடன் தூய்மை இந்தியா திட்டத்தை நாடுமுழுவதும் நடைமுறைப்படுத்தனார். இதன் மூலம் மக்கள், அரசு ஊழியர்கள் தங்கள்வசிக்கும் இடங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்பதாகும். பிரதமர் மோடியே பல இடங்களில் குப்பைகளை அள்ளி தூய்மை இந்தியா திட்டத்தை செயல்படுத்தினார்.
தீவிரபிரசாரம்
நாட்டு மக்களும், வாழுமிடமும் சுகாதாரமாக இருக்க வேண்டும் என்பதற்காக மத்தியஅரசு சார்பில் வானொலி,தொலைக்காட்சி, பத்திரிகைகள் வாயிலாக தூய்மை இந்தியா திட்டம் குறித்து தீவிரமாக பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது.
இதுதானா ‘ஸ்வாச் பாரத்’?
இந்நிலையில், பிரதமர் மோடியின் அமைச்சரவையில் முக்கிய துறையாக விளக்கம் வேளாண்துறையின் அமைச்சராக இருக்கும் ராதா மோகன் சிங், தூய்மை இந்தியா திட்டத்தை காற்றில் பறக்க விடும் வகையில் ஒரு செயலைச் செய்துள்ளார். பொது இடத்தில், குறிப்பாக தனியார் ஒருவரின் வீட்டுச் சுற்றில் சிறுநீர் கழித்த படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.
சுவற்றில் சிறுநீர்
பீகார் மாநிலத்தில், கிழக்கு சம்பரன் பகுதியில் இருக்கும் மோத்திஹரி பகுதிக்கு நலத்திட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மத்திய அமைச்சர் ராதா மோகன் சிங் சென்றார். அப்போது, திடீரென சாலையின் ஓரத்தில் காரை நிறுத்திய அமைச்சர் ராதா மோகன் சிங், தனியார் ஒருவரின் வீட்டுச் சுவற்றில், சிறநீர் கழித்தார். அவர் சிறுநீர் கழிக்கும் வரை துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
கடும் கண்டனம்
இந்த புகைப்படம் டுவிட்டர், பேஸ்புக், வாட்ஸ் அப் என சமூக வலைதளங்களில் தீவிரமாக ஷேர் செய்யப்பட்டு கடும் கண்டனத்தையும், சர்ச்சையையும் கிளப்பியுள்ளது.
மத்தியஅரசின் தூய்மை இ்ந்தியா திட்டத்தை மதிக்காமல் மத்தியஅமைச்சர் ஒருவர் இப்படியா பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்வது என நெட்டிசன்கள் கண்டித்து வருகின்றனர்.
2-வது முறையாக சிக்கினார்
ராதா மோகன் சிங்க சர்ச்சையில் சிக்குவது இம்மாதத்தில் இது 2-வது முறையாகும். இதற்கு முன் சர்வதேச யோகா தினத்தையொட்டி சாமியார் பாபா ராம்தேவ் நடத்திய யோகா நிகழ்ச்சியில் ராதா மோகன் சிங் கலந்து கொண்டார். மத்தியப்பிரதேசத்தில் விவசாயிகள் 6 பேர் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், அதைப் பொருட்படுத்தாமல், அவர் யோகாவில் கலந்து கொண்டார் என விமர்சனங்கள் எழுந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
