2008 நிதி நெருக்கடிக்குப் பிறகு தோல்வியடைந்த மிகப்பெரிய வங்கியாக கடந்த வெள்ளிக்கிழமை அன்று சிலிக்கான் வேலி வங்கி மாறியுள்ளது.

சுமார் 10,000 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சிலிக்கான் வேலி வங்கியில் அவர்களின் பணத்தை டெபாசிட் செய்துள்ளனர். இந்த நிலையில் சிலிக்கான் வேலி வங்கி திவாலாவதை தொடர்ந்து அச்சிறு வணிக நிறுவனங்கள் அதன் ஊழியர்களுக்கு அடுத்த 30 நாட்கள் அதாவது ஒரு மாத சம்பளத்தை கொடுக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

2022 ஆம் ஆண்டின் இறுதியில், வங்கியின் $ 175 பில்லியன் டெபாசிட்களில், 89% டெபாசிட்கள் காப்பீடு செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. ஆதாரங்களை மேற்கோள் காட்டி, FDIC மற்றொரு வங்கியை சிலிக்கான் வேலியுடன் இணைக்க முயற்சிப்பதாகக் கூறப்பட்டது. இந்த நடவடிக்கையில் மூலம், பாதுகாப்பற்ற முதலீடுகளுக்கு பாதுகாப்பு வழங்க முடியும்.

இதையும் படிங்க..ஆஸ்கர் விருது பெற்ற 'நாட்டு நாட்டு' & ‘தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்’ - வாழ்த்துக்கள் சொன்ன பிரபலங்கள் யார் யார்.?

அமெரிக்காவைச் சேர்ந்த சிலிக்கான் வேலி வங்கியின் தோல்வியைத் தொடர்ந்து, இந்திய தொழில்முனைவோரின் தாக்கத்தை மதிப்பிடுவதற்காக இந்த வாரம் இந்திய தொழில்முனைவோரைச் சந்திப்பதாக மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார். வங்கியின் தோல்வி உலகெங்கிலும் உள்ள ஸ்டார்ட்அப்களை, குறிப்பாக இந்தியாவில் உள்ள ஸ்டார்ட்அப்களை எவ்வாறு பாதிக்கும் என்ற கவலைகள் அதிகரித்து வரும் நிலையில் இந்த மாநாடு நடைபெறுகிறது.

Scroll to load tweet…

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்ட மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், “சிலிக்கான் வேலி வங்கி மூடல் நிச்சயமாக உலகம் முழுவதும் உள்ள ஸ்டார்ட்அப்களை சீர்குலைக்கிறது. ஸ்டார்ட்அப்கள் புதிய இந்திய பொருளாதாரத்தின் ஒரு முக்கிய அங்கமாகும். இந்த நெருக்கடியின் போது பிரதமர் மோடி அரசு எவ்வாறு உதவ முடியும் என்பதைப் புரிந்துகொள்ள இந்த வாரம் இந்திய ஸ்டார்ட்அப்களுடன் சந்திக்க இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க..தமிழகத்தில் பாஜகவினர் உயிருடன் இருக்க முடியாது.. ஆளும் கட்சி ஆணவமா.? முற்றும் திமுக Vs பாஜக மோதல் விவகாரம்