நாடு முழுவதும் சிசேரியன் முறையில் நடைபெறும் பிரசவங்களின் எண்ணிக்கை எப்போதும் இல்லாத வகையில் அதிகரித்திருப்பதாக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி நேரம் தொடங்கியது. அப்போது பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நாட்டா நாடு முழுவதும் சிசேரியன் முறையில் நடைபெறும் பிரசவங்களின் எண்ணிக்கை எப்போதும் இல்லாத வகையில் அதிகரித்திருப்பதாக தெரிவித்தார்.

குறிப்பாக தனியார் மருத்துவமனைகளில், சிசேரியன் முறையிலான பிரசவங்கள் அதிகளவில் நடைபெறுவதாக குறிப்பிட்டார்.

தம்பதிகளின் தனிப்பட்ட விருப்பங்களாலும், இயல்பான பிரசவம் நடைபெறா வண்ணம் இருக்கும் உடல் நல சிக்கல்கள் காரணமாகவும் சிசேரியன்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

தனியார் மருத்துவமனைகளில், சிசேரியன்களின் எண்ணிக்கை குறைக்கவும், இதற்காக பிரத்தியேகமாக கவுன்சிலிங் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜே.பி.நட்டா உறுதியளித்துள்ளார்.