Asianet News TamilAsianet News Tamil

வேலையில்லா பட்டதாரியா நீங்கள்? அப்போ இன்று முதல் உதவித்தொகை பெறுங்கள்... முதல்வர் அதிரடி!

வேலையில்லாத பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை அளித்திடும் திட்டத்தை ஆந்திர மாநிலத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று தொடங்கி வைக்கிறார்.

Unemployed youth...monthly allowance...CM Chandrababu Naidu
Author
Andhra Pradesh, First Published Oct 2, 2018, 4:45 PM IST

வேலையில்லாத பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை அளித்திடும் திட்டத்தை ஆந்திர மாநிலத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று தொடங்கி வைக்கிறார். முக்கிய மந்திரி யுவ நெஸ்தம் என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள இந்திய திட்டம் கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி அளித்த வாக்குறுதியாகும். Unemployed youth...monthly allowance...CM Chandrababu Naidu

ஏறக்குறைய இந்த திட்டத்தில் 2 லட்சத்துக்கும் மேலான இளைஞர்கள் இந்த தி்ட்டத்தில் இணைய தங்களை பதிவு செய்துள்ளனர். நிதியுதவி கோரும் இளைஞர்கள் ஆன் லைன் மூலம் மட்டுமே பதிவு செய்ய முடியும். படித்த, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் வரையில் பாதுகாப்பு அளிப்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். மேலும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு பயிற்சியிலும் கவனம் செலுத்தப்படும்.

Unemployed youth...monthly allowance...CM Chandrababu Naidu

இந்த திட்டத்தை இன்று தொடங்கி வைக்கும் முதல்வர் சந்திரபாபு நாயுடு, இளைஞர்களுக்கு நிதியுதவி சான்றிதழை வழங்க உள்ளார். இந்த நிகழ்ச்சியில் 13 மாவட்டங்களைச் சேர்ந்த 400 இளைஞர்கள் பங்கேற்கின்றனர்.  இந்த திட்டத்தின் மூலம் 12 லட்சம் இளைஞர்கள் பயனடைவார்கள் என்றும், ஆண்டுக்கு ரூ.1,200 கோடி செலவாகும் என்றும் ஆந்திர அரசு தெரிவிக்கிறது. இந்த உதவித்தொகையானது பதிவு செய்த இளைஞர்களின் வங்கிக்கணக்கில் மாதத்தின் முதல்வாரத்தில் அரசு சார்பில் செலுத்தப்படும்.

Follow Us:
Download App:
  • android
  • ios