Asianet News TamilAsianet News Tamil

” அண்டர்டேக்கர் இதற்கு பெருமைப்படணும்” வைரலாகும் Pre-wedding Shoot வீடியோ

திருமணத்திற்கு முன்பு நடக்கும் ப்ரீ வெட்டிங் ஷூட்கள் (Pre-wedding Photoshoot) சமூக வலைதளங்களில் அடிக்கடி வைரலாகின்றன

Undertaker should be proud of this" Viral Pre-wedding Shoot Video
Author
First Published Jul 27, 2023, 11:44 AM IST

திருமண நாளில் மட்டுமே புகைப்படம் எடுத்து வந்த காலம் மாறி தற்போது, திருமணத்திற்கு முன்பு, பின்பு என பல போட்டோஷூட்களை தம்பதிகள் எடுத்து வருகின்றனர். அந்த வகையில் திருமணத்திற்கு முன்பு நடக்கும் ப்ரீ வெட்டிங் ஷூட்கள் (Pre-wedding Photoshoot) சமூக வலைதளங்களில் அடிக்கடி வைரலாகின்றன. வித்தியாசமாக, கிரியேட்டிவாக போட்டோஷூட் எடுக்கிறோம் என்ற பெயரில் நடத்தப்படும் இந்த ப்ரீ வெட்டிங் போட்டோ ஷூட் வீடியோக்கள், புகைப்படங்கள் பல சர்ச்சைகளில் சிக்கி வருகின்றன.

அந்த வகையில் தற்போது ஒரு ப்ரீ வெட்டிங் போட்டோஷூட் வைரலாகி உள்ளது. இந்த வீடியோவை ஹஸ்னா ஜரூரி ஹை என்ற ட்விட்டர் பயனர் பகிர்ந்துள்ளார். வீடியோவைப் பகிர்ந்த அவர், The "Undertaker" PreWedding shoot என்று குறிப்பிட்டுள்ளார். அந்த வீடியோ சில மணிநேரங்களில் வைரலானது. ஒரே நாளில் கிட்டத்தட்ட 6 லட்சம் பேர் வீடியோவை பார்த்துள்ளனர்.

அந்த வீடியோவில் மணமகள் பிங்க் நிற கவுன் மற்றும் மணமகன் சாதாரணமாக நீல நிற ஜீன்ஸ் மற்றும் பிங்க் நிற டி ஷர்ட் அணிந்துள்ளார். ரப்பர் தோட்டத்தில் வீடியோ எடுக்கப்பட்டது. வீடியோவின் ஆரம்பத்தில், மணமகனும், மணமகளும் நேருக்கு நேர் நிற்கிறார்கள். மணமகள் மணமகனின் தோள் மீது கால்களை வைக்க முயற்சிக்கிறாள். ஆனால் அவரால் ஏறமுடியவில்லை. இப்படி மணமகள் சிரமப்படும் நேரத்தில் மலையாள சினிமாவில் இருந்து சில நகைச்சுவை வசனங்கள் இடம்பெற்றுள்லன. . இறுதியாக மணமகள் ரப்பர் மரத்தின் உதவியுடன் மணமகனின் தோளில் ஏற முயன்று தோல்வியடைந்தார். பின்னர், கேமரா உதவியாளர் உதவியுடன், மணமகன் தனது தோளில் மணமகளை தூக்குகிறார். பின்னர் மணமகனின் தோளில் காலை தொங்கவிட்டபடி தலைகீழாக படுத்திருக்கும் மணமகளின் புகைப்படம் வருகிறது.

 

இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில் பலரும் இதுகுறித்து பதிவிட்டு வருகின்றனர். ட்விட்டர் பயனர் ஒருவர் “ இந்த படத்திற்கான போராட்டத்தை வீடியோவில் பார்த்தோம். "தி அண்டர்டேக்கர் இதைப் பற்றி பெருமிதம் கொள்ள வேண்டும்," என்று குறிப்பிட்டுள்ளார். மற்றொரு பயனர் “ திருமணத்தின் கேலிக்கூத்து” என்று குறிப்பிட்டுள்ளார். இதே போல் பலரும் தங்களின் ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் வெளிப்படுத்தி வருகின்றனர். ஒரு சிலர் தங்கள் அதிருப்தியையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

கணவர் இதை எல்லாம் செய்தால், மனைவியை ஏமாற்றுகிறார் என்று அர்த்தம்..

Follow Us:
Download App:
  • android
  • ios