Asianet News TamilAsianet News Tamil

பிரதமர் மோடியிடம் தொலைப்பேசியில் பேசிய உக்ரைன் அதிபர்... உக்ரைனில் அமைதி நிலவ உதவ வேண்டும் என வேண்டுகோள்!!

பிரதமர் மோடியிடம் தொலைப்பேசியில் பேசிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ஐ.நா.வில் உக்ரைனுக்கு ஆதரவான நிலைப்பாட்டை இந்தியா எடுத்ததற்கு நன்றி தெரிவித்துள்ளார். 

ukraine president zelenskyy spoke to pm modi and asked help to bring peace in Ukraine
Author
First Published Dec 26, 2022, 11:55 PM IST

பிரதமர் மோடியிடம் தொலைப்பேசியில் பேசிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ஐ.நா.வில் உக்ரைனுக்கு ஆதரவான நிலைப்பாட்டை இந்தியா எடுத்ததற்கு நன்றி தெரிவித்துள்ளார். முன்னதாக உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கு இடையே கடந்த பிப்.24 ஆம் தேதி முதல் போர் நடந்து வருகிறது. தற்போது சுமார் 300 நாட்களை கடந்துள்ள நிலையில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் இதுவரை உயிரிழந்துள்ளனர். உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிக்கும் நாடுகள் உக்ரைனுக்கு தேவையான ஆயுத உதவியை வழங்குவதுடன் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ரஷியா மீது பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்துள்ளன.

இதையும் படிங்க: நள்ளிரவு 1 மணி வரை மட்டுமே புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி... அரசின் அதிரடி முடிவால் மக்கள் அதிருப்தி!!

இதனிடையே ரஷ்யாவும் உக்ரைனும் அமைதி பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியது. ஆனால், உக்ரைனுக்கு அமெரிக்கா ஆயுத உதவி செய்து வருவதால் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பிரதமர் மோடியுடன் தொலைபேசி வாயிலாக உரையாடினார். அப்போது, உக்ரைனில் அமைதி நிலவ உதவவேண்டும். ஐ.நா.வில் உக்ரைனுக்கு ஆதரவான நிலைப்பாட்டை இந்தியா எடுத்ததற்கு நன்றி. ஜி 20 மாநாட்டின் இந்தியாவின் தலைமை பொறுப்பு வெற்றியடைய வாழ்த்துகிறேன் என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: சபரிமலையில் நாளை மண்டல பூஜை.. சுவாமிக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி ஐயப்பன் கோவிலுக்கு வந்தது!

இந்த உரையாடலுக்கு பின் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தனது டிவிட்டர் பக்கத்தில், நான் இந்திய பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடினேன். ஜி20 தலைமையை ஏற்ற இந்தியா சிறப்பாக செயல்பட வாழ்த்து தெரிவித்தேன். இந்த தளத்தில் தான் (ஜி20) நான் எனது அமைதி பார்முலாவை அறிவித்தேன். தற்போது அந்த பார்முலாவை அமல்படுத்துவதில் இந்தியாவின் பங்களிப்பை நான் நம்புகிறேன். உக்ரைனில் அமைதி நிலவ உதவ வேண்டும் எனவும், ஐ.நா.வில் உக்ரைனுக்கு ஆதரவான நிலைப்பாட்டை இந்தியா எடுத்ததற்கு நன்றி தெரிவித்தேன் என்று தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios