லண்டனில் ஜெகன்நாத் கோவில்! ரூ.250 கோடி நன்கொடை வழங்கிய ஒடிசா தொழிலதிபர்!
முதல் முறையாக பிரிட்டன் தலைநகர் லண்டனில் ஜெகன்நாத் கோவில் கட்டுவதற்காக ரூ.250 கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளார் ஒரு தொழிலதிபர்.
பிரிட்டனைச் சேர்ந்த ஶ்ரீ ஜெகன்நாத் சொசைட்டி யு.கே. என்ற ஆன்மிகத் தொண்டு நிறுவனம் லண்டனில் கோயில் கட்ட நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளது. அந்த முயற்சிக்கு உதவும் கையில் ஒடிசாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் 250 கோடி ரூபாய் தொகையை தாராளமாக வழங்கியுள்ளார்.
இந்தியாவுக்கு வெளியே அயல்நாட்டில் கட்டப்படும் கோயிலுக்கு இவ்வளவு பெரிய தொகை நன்கொடையாகக் கொடுக்கப்படுவது இதுவே முதல் முறை என்று சொல்லப்படுகிறது. இந்த நன்கொடையை வழங்கி இருப்பவர் ஒடிசாவில் பைனெஸ்ட் என்ற குழுமத்தை நடத்திவரும் தொழிலதபிர் பிஸ்வநாத் பட்நாயக்.
அவர் முதல்வராக நீடித்திருந்தால் பாஜக இன்னும் வலுவாக இருக்கும்: எடியூரப்பா மகன் விஜயேந்திரா
அட்சய திருதியை நாளை முன்னிட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தத் நன்கொடையை பிஸ்வநாத் பட்நாயக் வழங்கி இருப்பதாக தொகையைப் பெற்றுக்கொண்ட லண்டன் தொண்டு நிறுவனம் அறிவித்துள்ளது.
லண்டனின் புறநகரில் 15 ஏக்கர் நிலத்தில் கோயில் கட்டுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இதுவரை சுமார் 70 கோடி ரூபாய் நிதி திரட்டப்பட்டிருக்கும் நிலையில் கோவிலின் திட்டங்கள் வேகமாக நடந்து வருகின்றன. முதல் கட்ட கட்டுமானப் பணிகள் 2024ஆம் ஆண்டு இறுதிக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரிட்டன் மற்றும் அயர்லாந்து முழுவதிலும் இருந்து 600க்கும் மேற்பட்ட பக்தர்கள் இந்த கோயிலுக்கு நன்கொடை வழங்கியுள்ளனர். குறிப்பாக, பிரிட்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் பணிபுரியும் துணை தூதர் சுஜித் கோஷ் மற்றும் அமைச்சரும் எழுத்தாளருமான அமிஷ் திரிபாதி ஆகியோரும் நன்கொடை வழங்கிய முக்கிய பிரமுகர்களில் அடங்குவர்.
பிரதமர் மோடியைக் கடவுளாகக் கருதுவது மோசம் அல்ல: முன்னாள் ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி பேச்சு