பிரதமர் மோடியைக் கடவுளாகக் கருதுவது மோசம் அல்ல: முன்னாள் ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி பேச்சு
மகாராஷ்டிராவின் முன்னாள் ஆளுநரும், உத்தரகாண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான பகத் சிங் கோஷ்யாரி, நைனிடாலில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடியை 'கடவுள்' என்று புகழ்ந்தார்.
கர்நாடகாவின் தேவனஹள்ளி கிராமத்தில் முதியவர் ஒருவர் பிரதமர் நரேந்திர மோடியை 'கடவுள்' என்று புகழ்ந்த மறுநாள், மகாராஷ்டிர முன்னாள் ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியும் அதேபோலப் பேசியுள்ளார்.
சனிக்கிழமை நைனிடாலில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய உத்தரகாண்ட் முன்னாள் முதல்வரும் பமகாராஷ்டிர முன்னாள் ஆளுநருமான பகத் சிங் கோஷ்யாரி, “பிரதமர் நரேந்திர மோடியை கடவுளாகக் கருதுவது மோசமான செயல் அல்ல” என்றார். மேலும், "பிரதமரை வணங்க வேண்டும் என்று நான் கூறவில்லை, ஆனால் அவர் சொல்வதை நாம் கேட்க வேண்டும்" எனவும் வலியுறுத்தினார். கோஷ்யாரியின் இந்தப் பேச்சு வீடியோவாக சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
"எந்த அரசாங்கமும் ஒவ்வொரு வேலை தேடுபவர்களையும் வேலைக்கு அமர்த்த முடியாது. நாம் சுயசார்பு உடையவர்களா ஆகிவிட்டோம்" எனவும் கோஷ்யாரி குறிப்பிட்டார்.
வெள்ளிக்கிழமை, கர்நாடகாவின் தேவனஹள்ளி கிராமத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் ரோடு ஷோ மழையால் அடித்துச் செல்லப்பட்டதை அடுத்து, கிராமவாசி ஒருவர் பிரதமர் மோடியின் கட் அவுட்டைத் துடைப்பதைக் கண்டார். வெள்ளைச் சட்டையும் வேட்டியும் அணிந்திருந்த அந்த கிராமவாசியிடம், அவரது செயல் குறித்தும், பிரதமர் மோடியின் கட்அவுட்டைத் துடைத்ததற்காக அவருக்கு பணம் கொடுக்கப்பட்டதா என்றும் கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த அவர், பிரதமர் மோடியின் கட்அவுட்டில் இருந்த மழை நீரைத் துடைப்பதாக கூறினார். மேலும், "மோடிஜி கடவுள். இதற்காக யாரும் எனக்குப் பணம் கொடுக்கவில்லை" எனவும் தெரிவித்தார்.
இதற்கிடையில், திங்களன்று மத்தியப் பிரதேசத்தில் ரேவாவில் நடைபெற்ற தேசிய பஞ்சாயத்து ராஜ் தின நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, "முந்தைய அரசாங்கங்கள் கிராமங்களை வாக்கு வங்கிகள் அல்ல என்று புறக்கணித்தன. பாஜக தலைமையிலான அரசு நிலைமையை மாற்றி பஞ்சாயத்துகளுக்கு பெரும் மானியங்களை வழங்கியுள்ளது" என்றார். "முந்தைய அரசாங்கங்கள் கிராமங்களுக்கு பணம் செலவழிக்கத் தயங்கின. அதனால்தான் அவை புறக்கணிக்கப்பட்டன" எனவும் மோடி கூறினார்.
"கிராமங்களுக்கு இழைக்கப்பட்ட இந்த அநீதியை பாஜக முடிவுக்குக் கொண்டு வந்து, அவர்களின் வளர்ச்சிக்காக நமது கருவூலத்தைத் திறந்துவிட்டது" என அவர் மேலும் கூறினார். ஜன்தன் திட்டத்தின் கீழ் கிராமங்களில் 40 கோடிக்கும் அதிகமானோரின் வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.