இன்று வெளியாகிறது யுஜிசி நெட் தேர்வு முடிவுகள்? பார்ப்பது எப்படி? விவரம் உள்ளே!!

யுஜிசி நெட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என யுஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார் தெரிவித்துள்ளார். 

ugc net result wil be out today and here the details about how to see it

யுஜிசி நெட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என யுஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார் தெரிவித்துள்ளார். யுஜிசி நெட் தேர்வு பிப்ரவரி 21 முதல் மார்ச் 16 வரை ஐந்து கட்டங்களாக நடைபெற்றது. 83 பாடங்களுக்கு 8,34,537 பேர் UGC NET 2023 தேர்வை எழுதியுள்ளனர். நாடு முழுவதும் பல கட்டங்களாக தேர்வுகள் நடத்தப்பட்ட நிலையில், மார்ச் மாதத்தில் தேர்வின் கீ ஆன்சர்கள் வெளியிடப்பட்டு ஆட்சேபனைகள் பெறப்பட்டன.

இதையும் படிங்க: கொல்கத்தாவில் முதல் முறையாக ஆற்றுக்கு அடியில் மெட்ரோ ரயில்!

இந்த தேர்வு முடிவுகளுக்காக நாடு முழுவதும் 8.34 லட்சம் பேர் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் யுஜிசி நெட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என யுஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார் தெரிவித்துள்ளார். இந்த முடிவுகளை ugcnet.nta.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

இதையும் படிங்க: இந்த ஆண்டில் சூப்பர் எல்-நினோ அபாயம்! காலநிலை மாற்ற விஞ்ஞானிகள் எச்சரிக்கை

தேர்வு முடிவை பார்ப்பது எப்படி? 

  • ugcnet.nta.nic.in அல்லது ntaresults.nic.in க்குச் செல்லவும்.
  • UGC NET 2022 டிசம்பர் சுழற்சி முடிவுகள் இணைப்பைத் திறக்கவும்.
  • விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியுடன் உள்நுழையவும்.
  • சமர்ப்பித்து முடிவுகளை சரிபார்க்கவும்.
Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios