கடவுளின் தேசம் என்று வர்ணிக்கப்படும் கேரளாவில், தென்மேற்கு பருவமழை நூறாண்டுகளில் இல்லாத அளவுக்குகொட்டி தீர்த்தது. . தொடர் மழையால் மாநிலமே வெள்ளத்தில் மூழ்கியது.

ராணுவம், கடற்படை, விமானப்படை, தேசிய பேரிடர் மீட்புப் படை, கடலோர காவல் படை, துயை ரா1வப் படை வீரர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மாநிலத்தில் மொத்தமுள்ள 14 மாவட்டங்களில் 13 மாவட்டங்கள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் தமிழ் திரையுலகைச் சேர்ந்தவர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்ட்ட கேரள மக்களுக்கு தங்களால்  இயன்ற உதவிகளை செய்துள்ளனர். நடிகர் விஜய் சேதுபதி 25 லட்சம் ரூபாயும், சூர்யா, கார்த்தி ஆகியோர் 25 லட்சம் ரூபாயும், கமல்ஹாசன்  மற்றும் சிவ கார்த்திகேயன் ஆகியோர் தலா 10 லட்சம் ரூபாயும். நடிகை ஸ்ரீபிரியா, ரோகினி, நயன்தாரா தலா 10 லட்சம் ரூபாயும் முதலமைச்சர்  நிவாரணத்துக்கு அளித்துள்ளனர்.

 

கனமழையால் கேரள மாநிலத்துக்கு கிட்டத்தட்ட 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில் மத்திய அரசு வெள்ள நிவாரணப் பணிகளுக்காக சென்ற வாரம் 100 கோடி ரூபாய் ஒதுக்கி உத்தரவிட்டிருந்தது. மேலும் பிரதமர் மோடி கேரள வெள்ள பாதிப்புகளை நேரில் பார்த்த பின் கூடுதலாக 500 கோடி ரூபாய் நிதியுதவியை அறிவித்தார்.

 

தமிழ்நாடு, ஆந்திராஇ தெலுங்கானா, பீகார், டெல்லி உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்களும் கேரள அரசுக்கு நிதியுதவி அளித்தன, அது மட்டுமின்றி கேரளாவுக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள் குவிந்து வருகின்றனர்.

 

கத்தார் நாட்டின் சார்பில் 35 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என மன்னர் தெரிவித்திருந்தார், கேரளாவுக்கு உலக நாடுகள் உதவி செய்ய வேண்டும் என கத்தோலிக்க போப் அறிவித்திருந்தார்.

 

இந்நிலையில் ஐக்கிய அரபு நாட்டின் அதிபர் கேரளாவுக்கு உதவி செய்ய  Emirates Red Crescent  அமைப்பின் தலைவரும்,  சில மனித நேய குழுக்களின் தலைவர்கள் குழு ஒன்றை நியமித்தார்.

 

கேரள சகோதரர்களே கவலைப்பட வேண்டாம் நாங்கள் இருக்கிறோம்… உங்களுக்கு உதவி செய்கிறோம் எனவும் ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் கலிபா அறிவித்திருந்தார்.

 

அதன்படி கேரளாவுக்கு 700 கோடி ரூபாய் நிதியுதவி அளிப்பதாக ஐக்கி அரபு அமீரகம் அறிவித்துள்ளது. இதுவரை யாருமே அறிவிக்காத பெருந்தொகையை அந்நாடு அளித்துள்ளது.

 

இதையடுத்து ஐக்கிய அரபு அமீரகத்துக்கு கேரள மதலமைச்சர் பினராயி விஜயன் நன்றி தெரிவித்துள்ளார்.