கேரளாவில் 2 இயற்கைக்கு மாறான மரணங்கள் : நிபா எச்சரிக்கை விடுத்த அரசு..

கேரளாவில் 2 இயற்கைக்கு மாறான மரணங்கள் பதிவானதை அடுத்து அங்கு நிபா வைரஸ் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

two unnatural deaths in Kerala: Govt issues Nipah alert.. Rya

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் காய்ச்சல் காரணமாக 2 இயற்கைக்கு மாறான மரணங்கள் பதிவாகியதை அடுத்து, கேரள சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த உயிரிழப்புகளுக்கு நிபா வைரஸ் தொற்று காரணமாக இருக்கலாம் என சுகாதாரத்துறை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். கோழிக்கோடு தனியார் மருத்துவமனையில் இந்த இரண்டு மரணங்களும் பதிவாகி உள்ளது.

மேலும், இறந்தவர்களில் ஒருவரின் உறவினர் தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார். இந்த நோயாளிக்கான பரிசோதனை முடிவுகள் புதன்கிழமை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தலைமையில் உயர்மட்டக் கூட்டம் நிலைமையை ஆய்வு செய்தது. கோழிக்கோடு மாவட்டத்தில் ஏற்கனவே 2 முறை நிபா வைரஸ் பாதிப்பு பதிவாகி உள்ளது. 

மக்களே ஜாக்கிரதை.. எளிதில் பரவும் மெட்ராஸ் ஐ பாதிப்பு .. எப்படி தற்காத்து கொள்வது?

கேரளாவில் நிபா வைரஸ் பரவல் : நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது:

  • தென்னிந்தியாவில் முதல் நிபா வைரஸ் பரவல் 2018 இல் கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் பதிவானது. அதன் பின்னர் 2021 இல் கோழிக்கோடு மாவட்டத்தில் மிகப்பெரிய வைரஸ் பரவல் ஏற்பட்டது.
  • உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, நிபா வைரஸ் தொற்று என்பது விலங்குகள் வழியாக மனிதர்களுக்கு பரவும் ஒரு நோயாகும், மேலும் இது அசுத்தமான உணவு மூலமாகவோ அல்லது நேரடியாக மக்களிடையே பரவுகிறது. இந்த வைரஸ் மனிதர்களுக்கு மட்டுமல்ல, விலங்குகளுக்கும் ஆபத்தானது. இந்த வைரஸ் பன்றிகள் போன்ற விலங்குகளுக்கும் கடுமையான நோயை ஏற்படுத்தக்கூடும்,
  • இதன் விளைவாக விவசாயிகளுக்கு கணிசமான பொருளாதார இழப்பு ஏற்படுகிறது என்று WHO தெரிவித்துள்ளது.
  • நிபா வைரஸ் ஆசியாவில் சில பாதிப்புகளை மட்டுமே ஏற்படுத்தியிருந்தாலும், இது விலங்குகளை பரவலாக பாதிக்கிறது.
  • மக்களுக்கு கடுமையான நோய் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் மரணத்தை ஏற்படுத்துகிறது என்று WHO அதன் இணையதளத்தில் தெரிவித்துள்ளது.
  • நிபா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் கடுமையான சுவாச நோய் மற்றும் அபாயகரமான மூளையழற்சி போன்ற கடுமையான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
  • நிபா வைரஸின் அறிகுறிகள் கொரோனாவின் அறிகுறிகளை போலவே இருக்கும். இருமல், தொண்டை வலி, தலைச்சுற்றல், தசை வலி, சோர்வு, மூளையழற்சி (மூளை வீக்கம்), தலைவலி, கடினமான கழுத்து, ஒளி உணர்திறன், மன குழப்பம் மற்றும் வலிப்பு ஆகியவை அதன் அறிகுறிகளில் அடங்கும்.
  • வைரஸுக்கு உறுதியான சிகிச்சை எதுவும் இல்லை என்றாலும், தரையில் விழுந்த பழங்களை சாப்பிடுவதைத் தவிர்ப்பது, பன்றிகளுக்கு உணவளிப்பதைத் தவிர்ப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் நோய் பரவலை தடுக்கலாம் என்று நிபுணர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios