ஐதராபாத்தில் எக்ஸ்பிரஸ் ரயில்- புறநகர் ரயில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்ததாகவும், 30 பேர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐதராபாத்தில் கச்சிகுடா ரயில் நிலையம் எழும்பூர் ரயில் நிலையத்தை போல் முக்கியமான ரயில் நிலையம் ஆகும். இங்கிருந்து தான் பல்வேறு மாநிலங்களுக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், கொங்கு எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் பயணிகள் ரயில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்ததாகவும், 30 பயணிகள் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. படுகாயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளன. 

இதுதொடர்பாக முதற்கட்ட விசாரணையில் சிக்னல் கோளாறால் ஒரே தண்டவாளத்தில் இரண்டு ரயில்கள் எதிரெதிரெ வந்த போது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. ரயில்வே அதிகாரிகள், தண்டவாளத்தில் இருந்து உடைந்த பெட்டிகளை நீக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் பல்வேறு ரயில்களின் அங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது.