பாகிஸ்தான் தீவிரவாதிகள் முகாம்கள் மீது குண்டு வீசி தாக்கி அழித்ததற்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ள நிலையில் மறுநாளே காஷ்மீரில் மிக் 21 போர் விமானம் வெடித்து சிதறியதில் விமானப்படை வீரர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதற்கு பாகிஸ்தான் ராணுவம் பொறுப்பேறுள்ளது.

பாகிஸ்தான் எல்லைக்குள் இந்திய விமானப்படை சென்று தாக்குதல் நடத்தி ஒரு நாள் ஆகிறது. இந்த தாக்குதலில் இந்திய விமான படைக்கு சொந்தமான மிராஜ் 2000 ரக 12 விமானங்கள் இணைந்து இந்த தாக்குதலை நடத்தியது. இந்நிலையில் இந்தியா தற்போது தீவிரமாக போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்தியாவுக்கு பதிலடி கொடுத்தே ஆகவேண்டும் என கொக்கரித்து பாகிஸ்தான் விமானங்கள் இந்திய எல்லையில் தாக்கி வருகிறது. இதனால்,இந்தியா தீவிரமாக போர் பயிற்சி செய்து வருகிறது. இந்த போர் பயிற்சியில் தற்போது எதிர்பாராத வகையில் பரிதாப சம்பவம் நேர்ந்துள்ளது. 

காஷ்மீரில் பியிற்சியில் ஈடுபட்டிருந்த மிக் 21 போர் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்கு உள்ளானதில் விமானப்படை வீரர்கள் இருவர் பலியாகினர். பயிற்சி செய்து கொண்டு இருந்த போது கட்டுப்பாட்டை இழந்த விமானம் வெடித்து சிதறி விபத்து ஏற்பட்டுள்ளது. விமானமே வெடித்து சிதறிய காரணத்தால் விமானத்தில் இருந்து விமானிகள் வெளியேற முடியவில்லை.

நேற்று தாக்குதல் நடந்த புட்காம் பகுதிக்கு 7 கிமீ தூரத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்த மறுநாளே இந்த விபத்து ஏற்பட்டது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே இந்திய விமானங்களை பாகிஸ்தான் விமானப் படை சுட்டு வீழ்த்தியதாக அந்நாட்டு ராணுவத் தளபதி ஆசிஃப் கஃபூர் தெரிவித்துள்ளார்.