Asianet News TamilAsianet News Tamil

புதிய நீதிபதிகள் நியமனம்: தலைமை நீதிபதி அனுப்பிய கடிதத்துக்கு கொலிஜியம் நீதிபதிகள் இருவர் எதிர்ப்பு

உச்ச நீதிமன்றத்துக்கு புதிய நீதிபதிகள் நியமிப்பது தொடர்பாக கருத்து மற்றும் ஒப்புதல் கேட்டு தலைமை நீதிபதி யுயு லலித் அனுப்பிய கடிதத்துக்கு கொலிஜியம் குழுவில் உள்ள இரு நீதிபதிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

Two Collegium judges disagree with the CJI UU Lalit's letter : appointment of new Supreme Court justices.
Author
First Published Oct 4, 2022, 1:55 PM IST

உச்ச நீதிமன்றத்துக்கு புதிய நீதிபதிகள் நியமிப்பது தொடர்பாக கருத்து மற்றும் ஒப்புதல் கேட்டு தலைமை நீதிபதி யுயு லலித் அனுப்பிய கடிதத்துக்கு கொலிஜியம் குழுவில் உள்ள இரு நீதிபதிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

இந்த தகவலை இந்துஸ்தான் டைம்ஸ் நாளேடு செய்தியாக வெளியிட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் வழக்கத்தில் இதுவரையில்லாத வகையில், 4 புதிய நீதிபதிகளை நியமிப்பது தொடர்பாக தலைமை நீதிபதி யுயு லலித், கொலிஜியம் குழுவில் உள்ள நீதிபதிகள் கருத்து, ஒப்புதல் கேட்டு கடிதம் எழுதியிருந்தார். இதற்கு முன் இதுபோல் தலைமை நீதிபதி கடிதம் எழுதி சம்மதம் கேட்கும் நடைமுறை இருந்தது இல்லை. 

இமாச்சலில் நாளை நடக்கும் தசரா பண்டிகை நிகழ்ச்சியில் பிரதமர் மோடி முதல்முறையாகப் பங்கேற்பு

இதன்படி, பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ரவி சங்கர் ஜா, பாட்னா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கரோல், மணிப்பூர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பி.வி.சஞ்சய் குமார், மூத்தவழக்கறிஞர் கே.வி.விஸ்வநாதன் ஆகியோரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க முடிவு செய்யப்பட்டது.

இது தொடர்பாக தலைமை நீதிபதி யுயு லலித் எழுதிய கடிதத்துக்கு கொலிஜியம் குழுவில் உள்ள 2 நீதிபதிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

ஆனால், வழக்கமாக தலைமை நீதிபதி கொலிஜியம் குழுவை நேரடியாக கூட்டிவைத்து, புதிய நீதிபதிகள் நியமனம் தொடர்பாக ஆலோசித்து, சம்மதம் பெறுவார். அந்தக்கூட்டத்தில் நீதிபதிகள் தங்களின் கருத்துக்களைத் தெரிவிப்பார்கள், ஏதேனும் மாற்றுக்கருத்து இருந்தால், விவாதிக்கப்பட்டு முடிவு எடுக்கப்படும். ஆனால், முதல்முறையாக கடிதம் மூலம் சம்மதம் கேட்கப்பட்டது.

ஜம்மு காஷ்மீர் சிறைத்துறை டிஜிபி ஹேமந்த் குமார் லோஹியா கொலை; வீட்டுப் பணியாளர் கைது!!

பார் அன்ட் பெஞ்ச் இணையதளம் வெளியிட்ட செய்தியில், “கொலிஜியம் குழுவில் உள்ள நீதிபதிகளில் இருவர் தலைமை நீதிபதி யுயு லலித் எழுதிய கடிதத்துக்கும், அவர் பரிந்துரைத்த 4 பேரை நீதிபதிகளாக நியமிக்கவும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். பொதுவாக கொலிஜியம் ஆலோசித்தபின்புதான், பரிந்துரைப்பட்டியலில் உள்ளோர் நீதிபதிகளாக உயர்த்தப்படுவார்கள்

தகவலின்படி, கடந்த 1ம் தேதி கொலிஜியம்குழுவில் உள்ள அனைத்து நீதிபதிகளுக்கும் தலைமை நீதிபதி கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்துக்கு குழுவில் உள்ள 2 நீதிபதிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்

கொலிஜியம் குழு நீதிபதிகள் எதிர்ப்புத் தெரிவி்த்தது, தலைமை நீதிபதி கடிதம் எழுதியது குறித்து நீதிமன்ற வட்டாரங்கள் கூறுகையில் “ இது எப்போதுமில்லாத நடவடிக்கை. நீதிபதிகளாக ஒருவர் உயர்த்தப்படாமல் இருக்க பல்வேறு காரணங்கள் உள்ளன. ஆனால், கடிதம் எழுதுவது சரியான முறை அல்ல. விவாதிப்பது என்ற முறையை ஒதுக்கிவிட முடியாது” எனத் தெரிவித்தன

செட்டிநாடு சிக்கன் முதல் மீன் குழம்பு வரை.. ஏர் இந்தியாவின் புதிய உணவு மெனு - பயணிகள் மகிழ்ச்சி !

கடந்த மாதம் 30ம் தேதி, கொலிஜியம் குழு ஆலோசித்து, நீதிபதிகளாக உயர்த்தப்பட வேண்டியவர்கள் பெயர்பட்டியலை அளிக்க இருந்த இருந்தது. ஆனால், கொலிஜியம் குழுவில் 2வது மூத்த நீதிபதியான டிஒய் சந்திரசூட் இரவு 9.30 மணிவரை நீதிமன்ற விசாரணை நடத்தியதால், ஆலோசனைக் கூட்டம் நடத்த முடியவில்லை

Follow Us:
Download App:
  • android
  • ios