Asianet News TamilAsianet News Tamil

kullu dussehra 2022: இமாச்சலில் நாளை நடக்கும் தசரா பண்டிகை நிகழ்ச்சியில் பிரதமர் மோடி முதல்முறையாகப் பங்கேற்பு

இமாச்சலப் பிரதேச மாநிலம், குலு நகரில் நாளை நடக்கும் சர்வதேச தசரா பண்டிகை நிகழ்ச்சியில் பிரதமர் மோடி முதல்முறையாகப் பங்கேற்க உள்ளார்.

Prime Minister Modi will take part in the Dussehra celebration Tomorrow in Himachal for the first time.
Author
First Published Oct 4, 2022, 1:17 PM IST

இமாச்சலப் பிரதேச மாநிலம், குலு நகரில் நாளை நடக்கும் சர்வதேச தசரா பண்டிகை நிகழ்ச்சியில் பிரதமர் மோடி முதல்முறையாகப் பங்கேற்க உள்ளார்.

பிரதமர் மோடி நாளை இமாச்சலப்பிரதேச மாநிலத்துக்கு பயணம் செய்ய உள்ளார். அங்கு உள்ள குலு மாவட்டத்தில் தால்பூர் மைதானத்தில் நடக்கும் சர்வதேச தசரா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி முதல்முறையாகப் பங்கேற்க உள்ளார். 

இந்த தசரா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்பது இதுதான் முதல்முறையாகும். தசரா பண்டிகையின்போடுத 300 சாமி சிலைகளின் மிகப்பெரிய ரத யாத்திரையும் நடக்கும் என்பதால், சர்வதேச அளவில் பார்வையாளர்கள் வருவார்கள்.

Prime Minister Modi will take part in the Dussehra celebration Tomorrow in Himachal for the first time.

அது மட்டுமல்லாமல் இமாச்சலப்பிரதேசத்தில் கட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையையும் பிரதமர் மோடி நாளை திறந்து வைக்க உள்ளார். பிரதமர் மோடி தனது பரபரப்பான பல்வேறு அலுவல்களுக்கு மத்தியிலும் இதுபோன்ற நிகழ்ச்சிகளிலும், பண்டிகைகளிலும் பங்கேற்று வருகிறார்.

கடந்த வாரம் குஜராத்துக்கு சென்ற பிரதமர் மோடி,அகமதாபாத்தில் நடந்த நவராத்திரி பண்டிகையில் கலந்து கொண்டார்.

https://tamil.asianetnews.com/world/the-nobel-prize-season-has-arrived-five-things-to-know-about-the-esteemed-awards-rj6cty

2022, ஆகஸ்ட் மாதம், விநாயகர் சதுர்த்தியன்று, மத்தியஅமைச்சர் பியூஷ் கோயல் வீட்டுக்குச் சென்று விநாயகர் சதுர்த்தியில் பிரதமர் மோடி பங்கேற்றார்.

ரக்ஸா பந்தன் பண்டிகையின்போது, பிரதமர் அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலர்களின் குழந்தைகளுடன் ராக்கி கயிறு கட்டி பிரதமர் மோடி கொண்டாடினார்.

2022, ஏப்ரல் மாதத்தில் பிகு  பண்டிகையின்போது மத்திய அமைச்சர் சர்பானந்த சோனாவால் இல்லத்துக்கு சென்று பிகு பண்டிகையை பிரதமர் மோடி கொண்டாடினார். 

Prime Minister Modi will take part in the Dussehra celebration Tomorrow in Himachal for the first time.

ஏப்ரல் மாதத்தில் நடந்த பிரகாஷ் புரப் பண்டிகையின்போது, டெல்லி செங்கோட்டியில் நடந்த, 400வது பிரகாஷ் பூரப் பண்டிகையில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.

நோபல் பரிசு பற்றி அறிய வேண்டிய 5 அம்சங்கள் என்ன?

பிப்ரவரி மாதம் நடந்த ரவிதாஸ் ஜெயந்தியின்போது, டெல்லி கரோல் பாக்கில் உள்ள குரு ரவிதாஸ் கோயிலுக்குச் சென்று, பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார்.

2021, டிசம்பர் 25ம் தேதி, குஜராத்தில் உள்ள குருதுவாரா லக்பத் சாஹிப்பில் நடந்த குரு நானக் தேவ்ஜி பண்டிகையில் பிரதமர் மோடி பங்கேற்றார்.

2020ம் ஆண்டு நவம்பரில் தீபாவளிப் பண்டிகையின்போது வாரணாசி சென்று தீபாவளி மகோத்சவத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார்.

வினாடிகளில் 100 ‘பம் ஸ்கிப்’: வங்கதேச இளைஞர் கின்னஸ் சாதனை

2018, ஏப்ரல் மாதம், புதுடெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில், நடந்த புத்த ஜெயந்தியில் பிரதமர் மோடி பங்கேற்றார்.

2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம், ஸ்ரீ குரு கோவிந்த் சிங் மகராஜ் 350வது ஆண்டு விழாவில், பாட்னாவில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார்.

Prime Minister Modi will take part in the Dussehra celebration Tomorrow in Himachal for the first time.

2017, பிப்ரவரியில் கோவையில் நடந்த மகா சிவராத்திரி நிகழ்ச்சியில் ஈஷா யோகா மையம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி, ஆதி யோகி சிவன் சிலையைத் திறந்து வைத்தார். 2016, லக்னோவில் நடந்த தசரா நிகழ்ச்சியிலும் பிரதமர் மோடி பங்கேற்றார்.

Follow Us:
Download App:
  • android
  • ios