பத்து மற்றும் 12ம் வகுப்பு.. ஆண்டுக்கு 2 முறை பொதுத்தேர்வு.. இது கட்டாயமா? - கல்வி அமைச்சர் கொடுத்த விளக்கம்!
எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு கல்வி ஆண்டில் இருந்தே 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு வருடத்திற்கு இருமுறை பொதுத்தேர்வு நடத்த திட்டமிட்டு இருப்பதாக அண்மையில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இது குறித்து ஒரு முக்கியமான தகவலை தற்பொழுது மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் மத்திய கல்வி அமைச்சகம் ஒரு புதிய பாடத்திட்ட முறையை அமைக்க உள்ளதாக சில தகவல்களை வெளியிட்டது. அதன்படி 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் தங்கள் தேர்வுக்கு சிறந்த முறையில் தயாராவதை உறுதி செய்ய, அவர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை பொது தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவித்தது.
அவர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படும் அந்த பொது தேர்வுகளில், அவர்கள் அதிக மதிப்பெண் எடுத்த தேர்வினை இறுதி மதிப்பெண்ணாக எடுத்துக்கொள்ள உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. இது பொதுத்தேர்வு மீது இருக்கும் மாணவர்களின் பயத்தை போக்க பெரிய அளவில் உதவும் என்று மத்திய கல்வி அமைச்சகம் கருத்து தெரிவித்தது.
சிறையில் தவறி விழுந்த அமைச்சர் செந்தில் பாலாஜி.. இப்போ டிஸ்சார்ஜ் - இடையில் என்ன நடந்தது.?
ஒரு முறை மாணவர் குறைந்த மதிப்பெண் எடுக்கும் பொழுது, அடுத்த முறை இதைவிட அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும் என்ற தூண்டுதல் அவர்களுக்குள் எழும் என்றும் அமைச்சகம் சுட்டிக்காட்டியது. இதற்கு மாணவர்கள் மத்தியிலும் வரவேற்பு இருப்பதாக அமைச்சகம் வெளியிட்ட தகவலில் குறிப்பிட்டு இருந்தது நினைவுகூரத்தக்கது.
இந்நிலையில் இது குறித்து பல கேள்விகள் எழுந்த நிலையில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஒரு முக்கிய செய்தியை தற்பொழுது வெளியிட்டுள்ளார். அவர் ஒரு செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் "ஆண்டுக்கு இரண்டு முறை 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டது. அதை அடுத்து நான் தொடர்ச்சியாக பல மாணவ மாணவிகளை சந்தித்து பேசி வருகிறேன்".
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
"அனைவரும் இந்த புதிய முறைக்கு பெரும் வரவேற்பை அளித்து வருகின்றனர். ஆகவே 2024 ஆம் ஆண்டிலிருந்து இந்த புதிய கல்வித் திட்டம் அமலாகும் என்று அவர் கூறினார். ஆனால் மாணவர்கள் வருடத்திற்கு இருமுறை நடத்தப்படும் பொது தேர்வில், முதல் பொது தேர்விலேயே நல்ல மதிப்பெண் எடுத்துவிட்டு, இதுவே தனக்கு ஒரு நல்ல மதிப்பெண்ணாக இருக்கும் என்று கருதும் நிலையில் அவர்கள் இரண்டாவது முறை தேர்வு எழுத வேண்டிய தேவை இருக்கா என்றார்" அவர்.
"அதே நேரத்தில் இரண்டாவது முறை தேர்வு எழுதினால், இன்னும் நல்ல மதிப்பெண் எடுக்கலாம் என்று நினைக்கின்ற மாணவர்கள் மட்டுமே இரண்டாவது முறை நடக்கும் பொது தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்" என்று அவர் தெளிவுபடுத்தினார்.
காவிரி நீர் நமது உரிமை.. இது பிச்சை அல்ல.. தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பேச்சு..