இன்னும் 2000 ரூபாய் நோட்டு வச்சுருக்கீங்களா? தபால் மூலம் அனுப்பி... வங்கி கணக்கில் வரவு வைக்கலாம் தெரியுமா?
2000 Rupees Note : கடந்த மே 19 அன்று, ரிசர்வ் வங்கி 2,000 மதிப்புள்ள வங்கி நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக அறிவித்தது. மேலும் மே 19, 2023 நிலவரப்படி புழக்கத்தில் இருந்த 2,000 ரூபாய் நோட்டுகளில் 97 சதவீதத்திற்கும் அதிகமானவை திரும்பி வந்துவிட்டன என்றும் தெரிவித்தது.
இந்நிலையில் இன்னும் அந்த 3 சதவிகித 2000 ரூபாய் நோட்டுகளை வைத்துள்ள மக்கள் அதை நேரடியாக ரிசர்வ் வங்கியின் குறிப்பிட்ட பிராந்திய அலுவலகங்களுக்கு "காப்பீடு செய்த தபால்" மூலம் நேரடியாக தங்கள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கலாம் என்ற தகவலை தற்போது அறிவித்துள்ளது ரிசர்வ் வாங்கி. இது குறித்து இந்த பதிவில் முழுமையாக காணலாம்.
ரிசர்வ் வங்கியின் பிராந்திய அலுவலகங்களுக்கு வெளியே இருக்கும் மக்களுக்கு தபால் மூலம் 2000 நோட்டுகளை அனுப்பும் இந்த முறை, ஒரு சிரமம் இல்லாத வழியாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ரிசர்வ் வங்கி மக்கள் தங்கள் வங்கிக் கணக்கில் 2,000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்வதற்கு TLR (டிரிபிள் லாக் ரெசிப்டக்கிள்) படிவத்தை வழங்குகிறது.
இதுகுறித்து அறிவித்த RBI.. "வாடிக்கையாளர்களுக்கு காப்பீடு செய்யப்பட்ட இடுகையின் மூலம் ஆர்பிஐக்கு மிகத் தடையற்ற மற்றும் பாதுகாப்பான முறையில் நேரடியாக வரவு வைக்குமாறு வாடிக்கையாளர்களை ஊக்குவிக்கிறோம். இது குறிப்பிட்ட கிளைகளுக்குச் செல்வது மற்றும் வரிசையில் நிற்பது போன்ற தொந்தரவிலிருந்து அவர்களைக் காப்பாற்றும்" என்று ரிசர்வ் வங்கியின் பிராந்திய இயக்குநர் ரோஹித் பி தாஸ் தெரிவித்துள்ளார்.
TLR மற்றும் காப்பீடு செய்யப்பட்ட தபால் ஆகிய இரண்டு முறைகளும் தங்கள் பணத்தை செலுத்த மிகவும் பாதுகாப்பான முறை என்று RBI தெரிவித்துள்ளது. மேலும் இந்த விருப்பங்கள் தொடர்பாக பொதுமக்கள் மனதில் எந்த அச்சமும் இருக்கக்கூடாது, டெல்லி அலுவலகம் மூலம் மட்டும் இதுவரை சுமார் 700 TLR படிவங்கள் பெறப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.
ரிசர்வ் வங்கி, அதன் தகவல்தொடர்புகளில், அதன் அலுவலகங்களில் பரிமாற்ற வசதியைத் தவிர, இந்த இரண்டு விருப்பங்களையும் மக்கள் தேர்வு செய்ய வலியுறுத்துகிறது. மே 19 அன்று, ரிசர்வ் வங்கி 2,000 மதிப்புள்ள வங்கி நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக அறிவித்தது. மே 19, 2023 நிலவரப்படி புழக்கத்தில் இருந்த 2,000 ரூபாய் நோட்டுகளில் 97 சதவீதத்திற்கும் அதிகமானவை திரும்பி வந்துவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D