பெங்களூரு.. கொசுவை ஆய்வு செய்ததில் கிடைத்த பகீர் தகவல் - காய்ச்சல் அறிகுறிகள் உள்ளதா? அதிகாரிகள் சோதனை!
Bengaluru Zika Virus : பெங்களூரு அருகே ஜிகா (Zika) வைரஸ் கண்டறியப்பட்டுள்ள நிலையில், அப்பகுதியில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும், இப்போது பகுப்பாய்வு செய்யப்பட்டு வருகின்றன என்ற தகவல் வெளியாகியுள்ளது.
பெங்களூரு, சிக்கபள்ளாப்பூரில் உள்ள ஒரு கொசுவை கடந்த ஆகஸ்ட் மாதம் பரிசோதனைக்கு அனுப்பியதில், அதில் இந்த ஜிகா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் இந்த மாதிரி எடுக்கப்பட்ட தல்கேபெட்டா பகுதியின் 5 கிலோமீட்டர் சுற்றளவில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காய்ச்சல் உள்ளவர்களுக்கு சோதனையும் நடத்தப்படுகிறது.
"அம்மாநிலம் முழுவதும் இருந்து சுமார் 100 மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. அதில் ஆறு மாதிரிகள் சிக்கபள்ளாபூரிலிருந்து வந்தவை, அவற்றில் ஐந்து சோதனை எதிர்மறையானது. ஒன்று நேர்மறையாக இருந்தது," என்று மாவட்ட சுகாதார அதிகாரி டாக்டர் எஸ் மகேஷ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அதிக காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மூன்று நோயாளிகளின் மாதிரிகள் நோயியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அவர்கள் இப்போது நன்றாக இருக்கிறார்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. மாநிலம் தழுவிய இயக்கத்தின் போது சேகரிக்கப்பட்ட பல மாதிரிகளில் வைரஸைக் கொண்டு செல்லும் கொசுவும் இருந்தது. அக்டோபர் 25 ஆம் தேதி முடிவுகள் வந்தன.
டெங்கு மற்றும் சிக்குன்குனியா போன்ற தொற்றுநோய்களை பரப்பும் நோய்த்தொற்றுடைய ஏடிஸ் கொசுவின் மூலம் தான் ஜிகா வைரஸ் நோய் பரவுகிறது. இந்த வைரஸ் முதன்முதலில் 1947ல் உகாண்டாவில் கண்டறியப்பட்டது. கடந்த டிசம்பரில், கர்நாடகாவின் ராய்ச்சூர் மாவட்டத்தில் ஐந்து வயது சிறுமிக்கு ஜிகா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சந்திரபாபு நாயுடுவின் உடல்நலப் பிரச்சினைகள் இதுதான்!
இது தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை வெளியிடவும் அரசாங்கத்தை தூண்டியது என்பது குறிப்பிடத்தக்கது. மகாராஷ்டிராவில் கடந்த டிசம்பரில் ஒரு முதியவர் ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D