அருணாச்சல பிரதேசத்தில் இன்று அதிகாலை அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டது

அருணாச்சல பிரதேசத்தில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. அதுவும் 2 மணி நேரத்தில் அடுத்தடுத்து 2 நிலநடுக்கங்கள் பதிவானதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.அதன்படி அதிகாலை 1.49 மணிக்கு முதல் நிலநடுக்கம் பதிவானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 3.7 என்ற ரிக்டர் அளவில் பதிவானதாகவும் என்றும், அட்சரேகை 27.38 மற்றும் தீர்க்கரேகை 92.77 இல் 10 கிலோமீட்டர் ஆழத்தில் அமைந்திருந்தது என்றும் கூறப்பட்டுள்ளது. அருணாச்சல பிரதேசத்தின் மேற்கு கமெங்கில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.’

கர்ப்பிணிகளுக்கு ரூ.5000! தாய்மார்களுக்கு மத்திய அரசு உதவித்தொகை! விண்ணப்பிப்பது எப்படி?

இந்திய நிலநடுக்க ஆய்வு மையம் இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதுல் அந்த பதிவில் " இன்று அதிகாலை 1.49 மணிக்கு நிலநடுக்கம் 3.7 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 92.77, ஆழத்தில் மேற்கு கமெங்கில் இருந்து 10 கி.மீ தூரத்தில் இந்த நிலநடுக்கம் பதிவானது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

Scroll to load tweet…

இந்த நிலநடுக்கம் ஏற்பட்டு இரண்டு மணி நேரத்திற்குள், அதிகாலை 03:40 மணிக்கு, இரண்டாவது நிலநடுக்கம் பதிவாகியது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவாகி அருணாச்சல பிரதேசத்தின் கிழக்கு கமெங்கில் மையம் கொண்டிருந்தது.

Scroll to load tweet…

நிலநடுக்கம் அட்சரேகை 27.46 மற்றும் தீர்க்கரேகை 92.82 இல் 5 கிலோமீட்டர் ஆழத்தில் அமைந்துள்ளது. எனினும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் அல்லது உயிர்சேதம் குறித்து உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை.

கடுமையான தலைவலியுடன் வேலை பார்த்த சத்குரு! அப்பல்லோ மருத்துவர்கள் கொடுத்த அப்டேட்!