Asianet News TamilAsianet News Tamil

33வது மாடியில் நின்று சிகரெட் பிடித்து கெத்து காட்டியவருக்கு நேர்ந்த விபரீதம்!

காலையில் மற்ற நண்பர்கள் தூங்கிக்கொண்டிருந்த நிலையில் சர்மா மட்டும் எழுந்து சிகரெட் பிடிக்கச் சென்றபோது இந்த விபரீதம் நடந்துள்ளது. 

Trying to dispose of cigarette ash, techie falls from friend's 33rd floor Bengaluru flat, dies sgb
Author
First Published Dec 31, 2023, 9:50 PM IST

கர்நாடக மாநிலம் கிழக்கு பெங்களூருவில் கேஆர் புரம் அருகே உள்ள பட்டரஹள்ளியில் இளைஞர் ஒருவர் 33வது மாடியில் இருந்து கீழே விழுந்து இறந்துள்ளார். வெள்ளிக்கிழமை காலை இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

அந்த இளைஞர் புத்தாண்டை முன்னிட்டு இரவு வெகுநேரம் பார்ட்டியில் உல்லாசமாக இருந்திருக்கிறார். பின், தனது நண்பரின் வீட்டுக்குச் சென்ற அவர், 33வது மாடியில் உள்ள நண்பரின் வீட்டு பால்கனியில் நின்று சிகரெட் பிடித்தபோது தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

பால்கனியில் இருந்து சிகரெட் பிடித்தபோது சாம்பலை தட்டும்போது தவறி விழுந்ததாகவும் அப்பார்ட்மெண்ட் வளாகத்தின் நடைபாதைக்கு அருகில் விழுந்த அவர் சம்பவம் இடத்திலேயே பலியாகியுள்ளார் என என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மறக்கமுடியாத 2023ஆம் ஆண்டு! பிரதமர் மோடியின் 23 அபூர்வமான புகைப்படங்கள்!

Trying to dispose of cigarette ash, techie falls from friend's 33rd floor Bengaluru flat, dies sgb

பலியான இளைஞர் 27 வயதான திவ்யான்ஷு சர்மா தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். உத்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர் இவர் கேஆர் புரத்தை அடுத்த கொடிகேஹள்ளியில் வசித்து வந்தார்.

திவ்யான்ஷுவின் தந்தை இந்திய விமானப்படையில் பணியாற்றி ஓய்வுபெற்றுள்ளார். அவர் மற்ற குடும்ப உறுப்பினர்களுடன் ஹோரமாவுவில் வசிக்கிறார் என்று போலீசார் தெரிவிக்கின்றனர்.

வியாழன் இரவு, திவ்யான்ஷு சர்மாவும் அவரது மூன்று நண்பர்களும் அவர்களின் தோழியான மோனிகாவின் பிளாட்டுக்குச் சென்றுள்ளனர். அங்கிருந்து ஒயிட்ஃபீல்டில் உள்ள ஒரு மாலுக்குச் சேர்ந்து படம் பார்க்கச் சென்றனர். படம் ஏற்கெனவே தொடங்கிவிட்டதால், படத்தைப் பார்க்காமல் இந்திராநகரில் உள்ள ஒரு பப்பிற்குச் சென்றுள்ளனர்.

பப்பில் இருந்து அதிகாலை 2.30 மணியளவில் வீட்டுக்குத் திரும்பியுள்ளனர். மறுநாள் காலை மற்ற நண்பர்கள் தூங்கிக்கொண்டிருந்த நிலையில் சர்மா மட்டும் எழுந்து சிகரெட் பிடிக்கச் சென்றபோது இந்த விபரீதம் நடந்துள்ளது. இதுகுறித்து பெங்களூரு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்துகின்றனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios