மத்தியபிரதேசத்தில் சரக்கு லாரி மீது ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 பெட்டிகள் தடம் புரண்டது. மத்திய பிரதேச மாநிலத்தில் கோத்ரா-ரத்லம் இடையே உள்ள லெவல் கிராசிங் வழியாக இன்று காலை திருவனந்தபுரம் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் சென்றுகொண்டிருந்தது. 

அப்போது லெவல் கிராசிங்கின் கேட் மூடப்பட்டு வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு சரக்கு லாரி, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து லெவல் கிராசிங் கேட்டை உடைத்து கொண்டு ரயில் மீது மோதியது. 

எதிர்பாராதவிதமாக நடந்த இந்த விபத்தில் 2 பெட்டிகள் தடம்புரண்டன. லாரியின் முன்பகுதியும் முற்றிலுமா நொறுங்கியது. லாரி டிரைவர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் ரயில் பயணித்தவர்களுக்கு காயமின்றி தப்பித்தனர். பிறகு பாதிக்கப்பட்ட பயணிகள் வேறு பெட்டிகளுக்கு மாற்றப்பட்டனர். பின்னர் ரயில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது. இதனால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.