பிரபல தூத்சாகர் நீர்வீழ்ச்சி.. ட்ரெக்கிங் செய்ய தடை.. அப்செட்டான இளசுகள் - தடையை மீறியவர்களுக்கு தண்டனை!
அந்த பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் துர்சாகர் நீர்வீழ்ச்சிக்கு மலை ஏற்றம் செய்து செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோவாவிற்கு ரயிலில் செல்லும்பொழுது அந்த பயணிகளுக்கு கிடைக்கும் ஒரு அற்புத காட்சி தான் தூத்சாகர் நீர்வீழ்ச்சி. கர்நாடகாவின் பெலகாவி மற்றும் கோவாவிற்கு இடையே உள்ள எல்லைப் பகுதியில் அமைந்திருக்கிறது இந்த அற்புத நீர்வீழ்ச்சி.
வெயில் காலம் முடிந்து மழை காலம் துவங்கும் நேரத்தில் இங்கு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள், குறிப்பாக மலையேற்றம் எனப்படும் ட்ரெக்கிங் செய்பவர்கள் அதிக அளவில் இங்கு குவிக்கின்றனர். ஆனால் தற்போது அந்த பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் துர்சாகர் நீர்வீழ்ச்சிக்கு மலை ஏற்றம் செய்து செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சாலையில் கவிழ்ந்த தக்காளி லாரி.. அள்ள வந்த மக்களால் லாரிக்கு போலீஸ் பாதுகாப்பு - Tomato பரிதாபங்கள்!
ட்ரக்கிங் செய்பவர்களின் பாதுகாப்பை கருதி நீர்வீழ்ச்சிக்கு நுழையும் பகுதியில் ரயில்வே போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஆனால் தடையை மீறி தற்பொழுது நீர்வீழ்ச்சிக்கு நுழையும் பகுதியில் ஆயிரக்கணக்கான ட்ரெக்கிங் பயணிகள் குவிந்துள்ள நிலையில் அவர்களை மேலே செல்ல விடாமல் RPF அதிகாரிகள் தடுத்து வருகின்றனர்.
கனமழை காரணமாக நிலச்சரிவும், வெள்ளப்பெருக்கும் எப்பொழுது வேண்டுமானாலும் ஏற்படலாம் என்ற காரணத்தினால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக RPF வீரர்கள் இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இதை பொருட்படுத்தாமல் தடையை மீறி நீர்வீழ்ச்சியில் ஏற முயன்ற பல இளசுகளை ஒன்றாக நிறுத்தி அவர்களை "சிட் அப்ஸ்" செய்ய வைத்து தண்டனையும் கொடுத்துள்ளனர் ரயில்வே போலீசார்.
நீர்வீழ்ச்சி பகுதியில் ஆயிரக்கணக்கனில் இளைஞர்கள் கூடி நின்ற வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இரண்டு வங்கிகளின் உரிமம் ரத்து: பரிவர்த்தனைக்கு ஆர்.பி.ஐ., தடை!