சாலையில் கவிழ்ந்த தக்காளி லாரி.. அள்ள வந்த மக்களால் லாரிக்கு போலீஸ் பாதுகாப்பு - Tomato பரிதாபங்கள்!
தக்காளிகளை ஏற்றி சென்று கொண்டிருந்த ஒரு லாரி எதிர்பாராத விதமாக தெலுங்கானா மாநிலத்திற்கு அருகே உள்ள அதிதிலாபாத் என்ற இடத்தின் அருகே விபத்துக்குள்ளாகி கவிழ்ந்துள்ளது.
இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு.. என்று கூறும் அளவிற்கு ஒவ்வொரு நாளும் தக்காளி ஏதோ ஒரு விதத்தில் ஆச்சரியப்பட வைக்கும் செய்தி ஒன்றை கொடுத்துவிடுகிறது. இன்றைய நிலவரப்படி கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி சுமார் 130 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. தமிழக மட்டுமின்றி இந்தியாவின் பல பகுதிகளில் தக்காளி விலை உச்சத்தை எட்டி வருகிறது.
தக்காளியை பாதுகாக்க பவுன்சர்கள், தக்காளியை பாதுகாக்க விஷ பாம்புகள் என்று தக்காளி இல்லாத ஆட்டமெல்லாம் ஆடி வருகிறது. இந்நிலையில் அண்டை மாநிலமான கர்நாடகாவில் இருந்து டெல்லிக்கு சுமார் 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தக்காளிகளை ஏற்றி சென்று கொண்டிருந்த ஒரு லாரி எதிர்பாராத விதமாக தெலுங்கானா மாநிலத்திற்கு அருகே உள்ள அதிதிலாபாத் என்ற இடத்தின் அருகே விபத்துக்குள்ளாகி கவிழ்ந்துள்ளது.
யார்ரா நீங்க.? விலை உயரும் தக்காளியை பாதுகாக்கும் விஷ பாம்பு - ட்ரெண்டாகும் அதிர்ச்சி வீடியோ
இதனால் லாரியில் இருந்த தக்காளிகள் சாலையில் சிதறிய நிலையில், அதை அள்ளிச் செல்வதற்கு அருகில் இருந்த மக்கள் கூட்டம் கூட்டமாக வந்துள்ளனர். மக்கள் அதை எடுத்து செல்லாமல் இருக்க அருகில் இருந்த காவலர்களுக்கு தகவல் அறிவிக்கப்பட்ட நிலையில் ஆயுதம் ஏந்திய போலீசார், கவிழ்ந்து கிடந்த லாரிக்கு பாதுகாப்பு அளிக்க வந்துள்ளனர்.
அதன் பிறகு வேறு லாரி வரவழைக்கப்பட்டு கவிழ்ந்து கிடந்த லாரியில் இருந்த தக்காளிகள், அதில் ஏற்றப்பட்டு டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் தக்காளி செய்கின்ற அட்டூழியம் தாங்க முடியவில்லை என்றுதான் கூற வேண்டும். புனேவில் துக்காராம் என்ற விவசாயி கடந்த ஒரு மாத காலத்தில் சுமார் 13,000 கூடை தக்காளிகளை விற்று 1.5 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
தேசிய நெடுஞ்சாலையில் உள்நாட்டு தாவரங்கள்: மத்திய அரசு பரிந்துரை!