ரயில்கள் விபத்தில் 288 பேர் பலி எதிரொலி! அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து! ஒடிசாவில் ஒருநாள் துக்கம் அனுசரிப்பு.!
ரயில்கள் விபத்தில் 288 பேர் இதுவரை உயிரிழந்ததை அடுத்து ஒடிசாவில் இன்று ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படும் என அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.
ரயில்கள் விபத்தில் 288 பேர் இதுவரை உயிரிழந்ததை அடுத்து ஒடிசாவில் இன்று ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படும் என அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பஹானாகா ரயில் நிலையம் அருகே எதிர்பாராதவிதமாக கோரமண்டல் விரைவு ரயில், யஸ்வந்த்பூர் ஹவுரா விரைவு ரயில், சரக்கு ரயில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பலி எண்ணிக்கை 288 ஆக உயர்ந்துள்ளது. காயமடைந்தேதார் எண்ணிக்கை 1000ஐ தாண்டியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதில், சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இதையும் படிங்க;- கோரமண்டல் விரைவு ரயில் விபத்து.. தடம் புரண்ட ரயில் பெட்டிகள் எவை? வெளியான அதிர்ச்சி தகவல்.!
விபத்து நடந்த பகுதியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர், மாநில பேரிடர் மீட்பு படையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் இரவு பகல் பராமல் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ரயில் விபத்து எதிரொலியாக ஒடிசாவில் ஒருநாள் துக்கம் தினம் அனுசரிக்கப்படும்.
இதையும் படிங்க;- இந்தியாவில் நடந்த மிகப்பெரிய ரயில் விபத்துகள் என்னென்ன தெரியுமா.?
இந்த சோக சம்பவத்தை அடுத்து மாநிலத்தில் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாக ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.