Biggest Train Accidents in India: இந்தியாவில் நடந்த மிகப்பெரிய ரயில் விபத்துகள் என்னென்ன தெரியுமா.?
சென்னையை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரயில் ஒடிசா மாநிலத்தில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்தியாவில் நடந்த மிகப்பெரிய ரயில் விபத்துகள் பற்றி இங்கே பார்க்கலாம்.
கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கோரமண்டல் விரைவு ரயில் ஒடிசா மாநிலத்தின் பாலாசூர் மாவட்டம் அருகே வெள்ளிக்கிழமை இரவு சரக்கு ரயிலுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. ஒடிசாவின் பாஹா நாகா பஜார் ரயில் நிலையம் அருகே ரயில்கள் மோதிய இந்த விபத்தில் பயணிகள் பலரும் சிக்கியுள்ளனர். மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்தியாவில் நடந்த மிகப்பெரிய ரயில் விபத்துகள்:
* பீகார் விபத்து (ஜூன் 1981): நாட்டின் மிக மோசமான மற்றும் உலகின் இரண்டாவது பெரிய ரயில் விபத்து 1981-ல் பீகாரில் நடந்தது. ஜூன் 6, 1981 அன்று, பீகாரில் பாலகாட்டில் ஏற்பட்ட சூறாவளியின் போது, நெரிசல் மிகுந்த பயணிகள் ரயிலின் ஒன்பது பெட்டிகளில் ஏழு பாலத்தில் இருந்து தடம் புரண்டு பாக்மதி ஆற்றில் விழுந்ததில் குறைந்தது 800 பேர் உயிரிழந்தனர். மான்சியில் இருந்து சஹர்சாவுக்கு பயணிகள் ரயில் சென்று கொண்டிருந்தது. உயிரிழப்பு 2,000 ஆகவும் இருக்கலாம் என்று கூறப்பட்டது.
* கேரளா, ஜூலை 1988: கேரளாவில் உள்ள அஷ்டமுடி ஏரியின் மீதுள்ள பெருமான் பாலத்தில் ரயில் தடம் புரண்டு, ஏரியில் விழுந்ததில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பெங்களூரில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த ஐலேண்ட் எக்ஸ்பிரஸ் ரயிலின் 10 பெட்டிகள் தடம் புரண்டு ஏரியில் விழுந்தன. 14 பெட்டிகளில், என்ஜின், பார்சல் வேன் மற்றும் இரண்டாம் வகுப்பு பெட்டி மட்டுமே தடம் புரண்ட போது பாலத்தை கடந்து சென்றது. தண்ணீரில் விழுந்த ஒன்பது பெட்டிகளில் இரண்டு பெட்டிகள் தலைகீழாக கவிழ்ந்தன.
* ஃபைரோசாபாத், ஆகஸ்ட் 1995: உத்தரப்பிரதேச மாநிலம் ஃபைரோசாபாத் நகரில் இரண்டு ரயில்கள் மோதியதில் குறைந்தது 350 பேர் உயிரிழந்தனர்.
* கெய்சல், மேற்குவங்கம், ஆகஸ்ட் 1999: மேற்குவங்கத்தில் உள்ள கைசல் என்ற இடத்தில் இரண்டு ரயில்கள் மோதின. மேற்குவங்க மாநிலம் உத்தர் தினாஜ்பூரில் உள்ள கைசல் ரயில் நிலையத்தில் புது டெல்லியில் இருந்து வந்த அவத் அஸ்ஸாம் எக்ஸ்பிரஸ் பிரம்மபுத்ரா மெயில் மீது மோதியது. இதற்கு சிக்னல் பிழை காரணமாக கூறப்பட்டது. இந்த விபத்தில் 300 உயிரிழந்து இருந்தனர்.
* வேலுகொண்டா, ஆந்திரப் பிரதேசம் அக்டோபர் 2005: ஆந்திரப் பிரதேசத்தில், வேலுகொண்டா அருகே, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது, பயணிகள் ரயிலின் பல பெட்டிகள் தடம் புரண்டன. கிட்டத்தட்ட 100 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 92 பேர் காயமடைந்தனர்.
* புக்ராயன், கான்பூர், நவம்பர் 2016: இந்தூர்-பாட்னா எக்ஸ்பிரஸ் கான்பூரின் புக்ராயன் அருகே தடம் புரண்டதில் கிட்டத்தட்ட 150 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 200 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
* ஜூலை 7, 2011 அன்று, உத்தரப்பிரதேசத்தில் எட்டா மாவட்டம் அருகே சாப்ரா-மதுரா எக்ஸ்பிரஸ் பேருந்து மீது மோதியது. 69 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து அதிகாலை 1.55 மணியளவில் ஆளில்லா ரயில் கிராசிங்கில் நடந்து இருந்தது. ரயில் அதிவேகமாக வந்து கொண்டிருந்த காரணத்தால் பஸ் சுமார் அரை கிலோமீட்டர் வரை இழுத்துச் சென்றது.
* இந்திய ரயில்வே வரலாற்றில் 2012ஆம் ஆண்டு மிக மோசமான ரயில் விபத்துக்கள் நடந்தன. அந்த ஆண்டில் சுமார் 14 விபத்துக்கள் பதிவாகியுள்ளன. இதில் தடம் புரண்டது மற்றும் நேருக்கு நேர் மோதியது ஆகிய அடங்கும்.
* ஜூலை 30, 2012 அன்று, டெல்லி-சென்னை தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் நெல்லூர் அருகே தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
* மே 26, 2014 அன்று, உத்தரப்பிரதேசத்தின் சந்த் கபீர் நகர் பகுதியில், கோரக்பூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த கோரக்தாம் எக்ஸ்பிரஸ், கலிலாபாத் நிலையத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ரயிலின் மீது மோதியது. இந்த விபத்தில் 25 பேர் உயிரிழந்தனர் மற்றும் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
* மார்ச் 20, 2015 அன்று டேராடூனில் இருந்து வாரணாசிக்கு சென்று கொண்டிருந்த ஜனதா எக்ஸ்பிரஸ் ரயிலில் விபத்துகுள்ளானது. உத்தரப்பிரதேசத்தில் உள்ள ரேபரேலியில் உள்ள பச்ரவான் ரயில் நிலையம் அருகே ரயிலின் என்ஜின் மற்றும் இரண்டு அடுத்தடுத்த பெட்டிகள் தடம் புரண்டதில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 150 பேர் காயமடைந்தனர்.
* நவம்பர் 20, 2016 அன்று இந்தூர்-பாட்னா எக்ஸ்பிரஸ் 19321 கான்பூரில் புக்ராயன் அருகே தடம் புரண்டதில் குறைந்தது 150 பயணிகள் கொல்லப்பட்டனர் மற்றும் 150 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
* ஆகஸ்ட் 19, 2017 அன்று, ஹரித்வார் மற்றும் பூரி இடையே ஓடும் கலிங்கா உட்கல் எக்ஸ்பிரஸ் உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகரில் உள்ள கட்டௌலி அருகே விபத்துக்குள்ளானது. ரயிலின் 14 பெட்டிகள் தடம் புரண்டதில் 21 பயணிகள் உயிரிழந்தனர், 97 பேர் காயமடைந்தனர்.
* ஆகஸ்ட் 23, 2017 அன்று உத்தரப்பிரதேச மாநிலம் அவுரியா அருகே டெல்லி செல்லும் கைஃபியத் எக்ஸ்பிரஸின் ஒன்பது ரயில் பெட்டிகள் தடம் புரண்டதில் குறைந்தது 70 பேர் காயமடைந்தனர்.
* ஜனவரி 13, 2022 அன்று, மேற்கு வங்காளத்தின் அலிபுர்துவாரில் பிகானேர்-குவஹாத்தி எக்ஸ்பிரஸின் குறைந்தது 12 பெட்டிகள் தடம் புரண்டதில் 9 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 36 பேர் காயமடைந்தனர்.
இதையும் படிங்க..ஒரே பாதையில் வந்த ரயில்கள்.. சிக்னல் பிரச்னை.! கோரமண்டல் ரயில் விபத்தில் நடந்தது என்ன?
இதையும் படிங்க..சென்னை சென்ட்ரல் மெயில் உட்பட 7 ரயில்கள் ரத்து.. திருப்பி விடப்பட்ட 5 ரயில்கள் - முழு பட்டியல் இதோ