Asianet News TamilAsianet News Tamil

"உதட்டில் முத்தமிடுவதோ, பிறப்புறுப்பை தொடுவதோ குற்றம் ஆகாது" - நீதிமன்றம் கிளப்பிய புது சர்ச்சை !!

உதட்டில் முத்தமிடுவதும், உடலை தீண்டுவதும் இயற்கை. இது குற்றமல்ல என நீதிமன்றம் கருத்துச் சொல்லியிருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Touching private parts, kissing not unnatural offence said Bombay High Court controversy judgement
Author
India, First Published May 17, 2022, 3:59 PM IST

மனைவியின் அனுமதியில்லாமல் கணவன் வலுக்கட்டாயமாக உறவில் ஈடுபட்டாலே குற்றம் என சட்டம் கூறும்போது, அவ்வப்போது நீதிபதிகள் சில நேரங்களில் பாலியல் வழக்கில் சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தற்போது மும்பை உயர் நீதிமன்றம் கொடுத்துள்ள தீர்ப்பும் இந்த வகையில் சேர்ந்துள்ளது. அது என்னவென்றால் உதட்டில் முத்தமிடுவதும், உடலை தீண்டுவதும் இயற்கை. இது குற்றமல்ல என கருத்துச் சொல்லியிருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மகாராஷ்டிரா மாநிலம், மும்யைச் சேர்ந்த ஒருவரின் வீட்டு பீரோவில் இருந்த பணம் மாயமாகியுள்ளது. இது குறித்து அவரது தந்தை தனது மகனிடம் கேட்டுள்ளார். இதற்கு அவர் செல்போனை ரீசார்ஜ் செய்ய பணத்தை எடுத்தாக கூறியுள்ளார். மேலும் செல்போன் ரீசார்ஜ் செய்யும் கடையின் உரிமையாளர் தன் உதட்டில் முத்தமிட்டதாகவும், தனது உறுப்பில் கை வைத்து தவறாக நடந்து கொண்டதாகவும் சிறுவன் தந்தையிடம் கூறியுள்ளார். 

Touching private parts, kissing not unnatural offence said Bombay High Court controversy judgement

இதைகேட்டு அதிர்ச்சியடைந்த சிறுவனின் தந்தை இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போலிஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து செல்போன் கடையின் உரிமையாளரை கைது செய்தனர். இந்த வழக்கிலிருந்து ஜாமீன் கேட்டு செல்போன் கடையின் உரிமையாளர் மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி அனுஜா பிரபுதேசாய், ஒருவரின் உதட்டில் முத்தமிடுவதும், உடலை தீண்டுவதும் இயற்கைக்குப் புறம்பான குற்றமல்ல.

மேலும் மருத்துவப் பரிசோதனையில் சிறுவன் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்படவில்லை என தெரியவந்துள்ளது. எனவே மனுதாரர் ரூ.30 ஆயிரம் செலுத்தி சொந்த ஜாமீன் பெற்றுக் கொள்ளளலாம் என உத்தரவிட்டுள்ளார். நீதிபதியின் இந்த கருத்து பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இதையும் படிங்க : இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1,000 எப்போது கிடைக்கும் ? அமைச்சர் சொன்ன குட் நியூஸ் !

இதையும் படிங்க : சீனர்களுக்கு 250 விசா வாங்கி கொடுத்த கார்த்தி சிதம்பரம்.! சிபிஐ ரெய்டு குறித்து வெளியான ‘பகீர்’ தகவல் !

Follow Us:
Download App:
  • android
  • ios