இன்றைய முக்கிய செய்திகள்: Top News Today 23.05.2023 | நாட்டில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளின் ஒருங்கிணைந்த தொகுப்பை இங்கே காணலாம்.

மறைந்த நடிகர் சரத்பாவுவின் இறுதிச்சடங்கு இன்று சென்னையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சரத்பாவுவின் இறுதிச்சடங்கு

ஆடவர் ஈட்டி எறிதலில் உலகளவில் முதலிடத்தை பிடித்து இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா சாதனை படைத்துள்ளார்.

நீரஜ் சோப்ரா

தமிழ்நாட்டில் உள்ள நூற்பாலைகள் தொடர் நஷ்டம் காரணமாக உற்பத்தியைப் பாதியாகக் குறைத்துள்ளதாக சிறு நூற்பாலைகள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜகதீஷ் சந்திரன் தெரிவித்துள்ளார்.

நூற்பாலைகளில் 50% உற்பத்தி குறைப்பு

துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் தனது மனைவி சுதேஷ் தன்கருடன் கண்ணூர் சென்றபோது தனது பள்ளி ஆசிரியரைச் சந்தித்து ஆசி பெற்றார்.

ஜக்தீப் தன்கர்

கொச்சியில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் யூத திருமணம் நடந்தது, கேரளாவில் உள்ள யூத சமூகம் கொச்சியில் நடந்த இந்த பாரம்பரிய திருமணத்தை கொண்டாடியது. ஞாயிற்றுக்கிழமை ஒரு தனியார் ரிசார்ட்டில் இந்த பிரமாண்டமான விழா நடந்தது. இந்த விழாவில் ரேச்சல் பினோய் மலாக்கி மற்றும் ரிச்சர்ட் சச்சரி ரோவ் ஆகியோர் தங்கள் திருமண உறுதிமொழிகளை ஏற்றுக்கொண்டதுடன், மோதிரங்களையும் மாற்றிக்கொண்டனர்.

யூத திருமணம்!

மே 3ஆம் தேதி கலவரத்துக்குப் பின் மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்திருக்கிறது. வீடுகளுக்குத் தீ வைக்கப்பட்டுள்ளதால், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மணிப்பூரில் மீண்டும் வன்முறை

ஜப்பானில் நடைபெற்ற ஜி7 மாநாட்டுக்குப் பின் பிரதமர் மோடி அங்கிருந்து பப்புவா நியூ கினியா நாட்டுக்குச் சென்றுள்ளார். அவரைப் போலவே அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் ஜப்பானில் இருந்து பப்புவா நியூ கினியா செல்வதாகத் திட்டமிடப்பட்டிருந்தது.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இருவரையும் ஒரே இடத்தில் சந்திக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள நினைத்த நியூசிலாந்து பிரதமர் கிறிஸ் ஹிப்கின்ஸ், அதற்காகவே நியூசிலாந்தில் இருந்து பப்புவா நியூ கினியா செல்ல திட்டமிட்டார்.

நியூசிலாந்து பிரதமர்

கோடை விடுமுறைக்கு பின்னர் தமிழ்நாட்டில், ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறப்பு

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் கழிவுநீர்த் தொட்டிகள் மற்றும் பாதாளச் சாக்கடைகளில் ஏற்படும் இறப்புகளை தடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

மு.க.ஸ்டாலின் அதிரடி

ஆவின் பணியாளர்கள் அனைவரும் 12 உத்தரவுகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவுறுத்தியுள்ளார்.

அமைச்சர் மனோ தங்கராஜ்.!