Asianet News TamilAsianet News Tamil

60 கி.மீ.க்கு ஒரு சுங்கச்சாவடி மட்டுமே செயல்பட நடவடிக்கை... மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்!!

தேசிய நெடுஞ்சாலைகளில் 60 கிலோ மீட்டருக்கு ஒரு சுங்கச்சாவடி மட்டுமே செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய சாலை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். 

toll plaza between 60 km will be removed says central minister nitin gadkari
Author
First Published Mar 24, 2023, 12:14 AM IST

தேசிய நெடுஞ்சாலைகளில் 60 கிலோ மீட்டருக்கு ஒரு சுங்கச்சாவடி மட்டுமே செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய சாலை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பல சுங்கச் சாவடிகள் விதிகளை மீறி செயல்படுவதாகவும் தேசிய நெடுஞ்சாலைகள் கட்டண விதிகள் 2008 சட்டப்படி, 60 கி.மீ. குறைவான இடைவெளியில் செயல்படும் சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்றும் மக்களவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன் கோரிக்கை விடுத்தார்.

இதையும் படிங்க: ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? விவரம் உள்ளே!!

அந்த கோரிக்கையை ஏற்ற மத்திய சாலை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி 60 கிலோ மீட்டருக்கு இடையில் உள்ள சுங்கச் சாவடிகள் அகற்றுவதற்கான அறிவிப்பை வெளியிட்டார். மேலும் 60 கி.மீ. தொலைவுக்கும் குறைவாக உள்ள சுங்கச்சாவடிகள் 3 மாதத்திற்குள் அகற்றப்படும் எனவும் அவர் உறுதி அளித்தார். இந்த அறிவிப்பின் படி தமிழகத்தில் சூரப்பட்டு- வானகரம் இடையிலான 19.5 கிமீ தொலைவிற்குள் உள்ள 2 சுங்கச் சாவடிகள், ஆத்தூர் - விக்கிரவாண்டி இடையிலான 43 கிமீ தொலைவிற்குள் உள்ள 2 சுங்கச்சாவடிகள், விக்கிரவாண்டி - செங்குறிச்சி இடையிலான 26 கிமீ தொலைவிற்குள் உள்ள 2 சுங்கச்சாவடிகள்

இதையும் படிங்க: மாதம் 84 ஆயிரம் சம்பளம் ரொம்ப கம்மி!பஞ்சாப் சட்டசபையில் எம்எல்ஏ பேச்சு!

செங்குறிச்சி - திருமந்துரை இடையிலான 52.5 கிமீ தொலைவிற்குள் 2 சுங்கச்சாவடிகள், சமயபுரம் - பூதக்குடி இடையிலான 43.4 கிமீ தொலைவிற்குள் 2 சுங்கச் சாவடிகள், பள்ளிகொண்டா - வாணியம்பாடி இடையிலான 50கிமீ தொலைவிற்குள் 2 சுங்கச்சாவடிக்குள் என மொத்தம் 6 சுங்கச்சாவடிகள் அகற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுக்குறித்து அன்மையில் அமைச்சர் எ.வ.வேலு, மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்து சென்னை புறநகரில் வானகரம் உள்பட 5 சுங்கச்சாவடிகளை அகற்ற கோரிக்கை வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios