ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? விவரம் உள்ளே!!

ரிசர்வ் வங்கியில் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

job vacancy in rbi and here the details about how to apply

ரிசர்வ் வங்கியில் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பணி விவரம்:

பணி: 

  • மருத்துவ உதவியாளர் (Pharmacists)

காலிப்பணியிடங்கள்:

  • மருத்துவ உதவியாளர் (Pharmacists) - 25

கல்வித் தகுதி:

  • விண்ணப்பதாரர்கள் 10, 12 ஆம் வகுப்பு முறையில் பள்ளி படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
  • Pharmacy பிரிவில் டிப்ள்மோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் / கல்லூரி அகியவற்றில் இருந்து  (B. Pharm) in Pharmacy-யில் இளங்கலை பட்டம் பெற்றவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம். 

இதையும் படிங்க: வண்ண மீன் வளர்ப்பில் ஆர்வமா? ரூ.20 ஆயிரம் முதல் ரூ.4.8 லட்சம் வரை உதவித்தொகை வழங்குகிறது மத்திய அரசு

தகுதிகள்: 

  • விண்ணப்பதாரர்கள் மகாராஷ்டிரா மாநில ஃபார்மசி கவுன்சிலில் பதிவு செய்பவராக இருக்க வேண்டும். 
  • விண்ணப்பதாரர்கள் இரண்டு ஆண்டு காலம் பணி அனுபவம் இருக்க வேண்டும். 
  • விண்ணப்பதாரர்களுக்கு கம்ப்யூட்டர் பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும். 

சம்பள விவரம்:

  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக ஒரு மணி நேரத்திற்கு ரூ.400 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  • ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 5 மணி நேரம் வேலை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  
  • ஒரு நாளைக்கு ரூ.2000 வரை பணித்திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணி காலம்:

  • இதற்கு 240 நாட்கள் ஒப்பந்த, அடிப்படையிலான வேலை என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மதுரை ரயில்வே கோட்டத்தில் டிக்கெட் வழங்கும் வேலை; இப்போதே விண்ணப்பிக்கலாம்!

தேர்வு செய்யும் முறை:

  • இதற்கு நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். கிடைப்பெறும் விண்ணப்பங்களில் இருந்து தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு நேர்காணலுக்கு அழைப்பு விடுக்கப்படும் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

விண்ணப்பிப்பது எப்படி?

  • இந்தப் பணிகளுக்கு https://www.rbi.org.in என்ற இணைப்பை க்ளிக் செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 

கடைசி தேதி:

  • 10.04.2023
Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios