Asianet News TamilAsianet News Tamil

வண்ண மீன் வளர்ப்பில் ஆர்வமா? ரூ.20 ஆயிரம் முதல் ரூ.4.8 லட்சம் வரை உதவித்தொகை வழங்குகிறது மத்திய அரசு

மத்திய அரசு வழங்கும் பிரதமரின் மீன்வளர்ப்புத் திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர்களுக்கு 4 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் வரை மானியம் கொடுக்கப்படுகிறது.

Pradhan Mantri Matsya Sampada Yojana gives 40 to 60 40 Percent Subsidy Fish Farming
Author
First Published Mar 23, 2023, 9:27 PM IST

வண்ண மீன் வளர்ப்பில் ஈடுபாடு கொண்டவர்கள் பிரதமரின் மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ்‌ உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்‌.

பிரதமரின் மீன்வள மேம்பாட்டு திட்டம் மீன்வளத்துறையை ஊக்குவிக்கும் வகையில் உதவித்தொகை அளித்துவருகிறது. அதன்படி சிறிய அளவிலான மீன் வளர்க்கும் அலகு ஒன்றுக்கு ஆகும்‌ மொத்த செலவில் செலவின தொகையான ரூ.3 லட்சத்தில் 40 சதவீதம் மானியமாக ரூ.1,20,000 வழங்கப்பட உள்ளது.

நடுத்தர அளவில் அலங்கார மீன் வளர்க்கும்‌ திட்டத்தில் அலகு ஒன்றுக்கு ஆகும்‌ செலவுத் தொகையான ரூ.8 லட்சத்தில் 40% மானியமாக ரூ.3,20,000 வழங்கப்படும். ஆதிதிராவிடர்‌ பிரிவைச் சேர்ந்த பயனாளிகளாக இருந்தால் 60% மானியமாக ரூ.4,80,000 கிடைக்கும்.

உங்களுக்கு நீதி கிடைக்கும்! சத்யமேவ ஜெயதே! ராகுல் காந்திக்கு ஆதரவாக கமல் ட்வீட்

Pradhan Mantri Matsya Sampada Yojana gives 40 to 60 40 Percent Subsidy Fish Farming

மேற்கண்ட திட்டங்களின் கீழ் நிதியுதவி பெற்று மீன்வளர்க்க ஆர்வமுள்ளவர்கள்‌ உரிய ஆவணங்களுடன்‌ விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள்‌ பெறப்பட்டதும் முன்னுரிமை மற்றும்‌ தகுதி அடிப்படையில்‌ உதவித்தொகை பெறுவதற்கு உரிய பயனாளிகள்‌ தேர்வு செய்யப்படுவார்கள்‌.

இதுதொடர்பான தகவல்களுக்கு 04342-296623, 04342-3584824260 என்ற தொலைபேசி எண்களில்‌ தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம்.

Explained: வீட்டில் ரொக்கமாக எவ்வளவு பணம் வைத்துக்கொள்ளலாம்? மீறினால் என்ன ஆகும்? முழு விவரம்

Follow Us:
Download App:
  • android
  • ios