2022ம் ஆண்டின் முதல் மற்றும் கடைசி சூரியகிரகணம் இன்று மாலை ஏற்படுகிறது. ஆனால் இது பகுதி சூரியகிரகணமாக இந்தியாவில் இருக்கும். 

2022ம் ஆண்டின் முதல் மற்றும் கடைசி சூரியகிரகணம் இன்று மாலை ஏற்படுகிறது. ஆனால் இது பகுதி சூரியகிரகணமாக இந்தியாவில் இருக்கும். 

தீபாவளிக்கு மறுநாளான இன்று ஏற்படும் சூரிய கிரகணம் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் ஓரளவுக்குத் தெரியும். இன்று மாலை சூரியன் மறைவு நேரத்தில்தான் பல்வேறு நகரங்களில் கிரகணத்தைப் பார்க்க முடியும்

இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்..முன்னோர்களுக்கு அமாவாசை தர்ப்பணம் கொடுப்பது எப்போது? First Published Oct 18, 2022, 9:52 AM IST
சூரியகிரகணம் என்று சூரியணுக்கும், பூமிக்கும் இடையே சந்திரன் வருவதால் ஏற்படுகிறது. இந்த சூரியகிரகணம் அதிகபட்சமாக இமாச்சலப்பிரதேசத்தில் 55 சதவீதம் பார்க்க முடியும். 

ஆனால், ஐரோப்பிய நாடுகள், மத்திய கிழக்கு நாடுகல், வடஆப்பிரிக்கா, மேற்கு ஆசியா, வடக்கு அட்லாண்டிக் கடல், வடஇந்திய பெருங்கடலில்தெளிவாகப் பார்க்க இயலும். 

இந்த கிரகணம் இந்தியாவில் மாலை 4.29 மணிக்கு சரியாகத் தொடங்குகிறது, உச்சக் கட்டத்தை மாலை 5.30 மணிக்கு ஏற்பட்டு, மாலை சூரியன் அஸ்தமனம் 5.48 நிமிடங்களுக்கு ஏற்படும். 

தீபாவளிக்கு மறுநாள் இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்.. கடும் நெருக்கடியை சந்திக்க போகும் ராசிகள் இவைகள் தான்.!

இந்தியாவில் பகுதி சூரியகிரகணம் பெரும்பாலான நகரங்களில் தெரியும். புதுடெல்லி, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா, சென்னை, அகமதாபாத், வாரணாசி, மதுரா, புனே, சூரத், கான்பூர், விசாகப்பட்டிணம், பாட்னா, ஊட்டி,கொடைக்கானல், சண்டிகர், உஜ்ஜைன், உள்ளிட்ட நகரங்களில் தெரியும்.

மத்திய புவி அறிவியல் துறை வெளியிட்ட அறிவிப்பில், “ இந்தியாவில் பகுதி சூரியகிரகணம் மட்டுமே தெரியும். சூரியன் மறைவுக்கு முன் கிரகணம் ஏற்படுகிறது. மக்கள் இதை வெறும் கண்களால் பார்க்கக் கூடாது. கோளரங்குகளில் வைக்கப்பட்டுள்ள சிறப்பு கருவிகள் மூலம் பார்க்கலாம்” எனத் தெரிவித்துள்ளது. 

சூரியகிரணம் ஏற்படும் நேரம் நகரங்கள் வாரியாக:

டெல்லி: 4.29(மாலை)

மும்பை- 4.29(மாலை)

பெங்களூரு-5.12(மாலை)

கொல்கத்தா-4.52(மாலை)

சென்னை-5.14(மாலை)

போபால்-4.42(மாலை)

ஹைதராபாத்-4.59(மாலை)

கன்னியாகுமரி-5.32(மாலை)

ஜெய்பூர்-4.31(மாலை)

லக்னோ-4.36(மாலை)

புவனேஷ்வர்-4.56(மாலை)

நாட்டிலேயே இந்தக் கோவில் மட்டுமே சூரிய கிரகணத்தின்போது திறந்திருக்கும்; என்ன காரணம்?

அதிகபட்சமாக குஜராத் மாநிலம் துவராகாவில் ஒருமணிநேரம் 45 நிமிடங்கள் வரை சூரியகிரகணம் நீடிக்கிறது. ஆனால், இந்த பகுதி சூரியகிரகணத்தை அந்தமான் நிகோபர் தீவுகள், வடகிழக்கு மாநிலங்களான அசாம், திப்ருகார்நகரம், இம்பால், இடாநகர், கோஹிமா, சிப்சாஹர், சில்சார் உள்ளிட்ட நகரங்களில் தெரியாது.

அடுத்த சூரியகிரணம் 2027ம் ஆண்டு, ஆகஸ்ட் 2ம் தேதி ஏற்படுகிறது. இது முழுச் சூரியகிரகணமாகும். இந்த கிரகணத்தை இந்தியாவின் அனைத்து நகரங்களில் இருந்தும் பார்க்க முடியும்.