சென்னை ரிசர்வ் வங்கி அலுவலகம் இன்று என அதிகாரிகள் தெரிவித்தனர். அதேசமயம், 3 வது சனிக்கிழமை என்பதால் வங்கிக் கிளைகள் அனைத்தும் வழக்கம்போல் இயங்கும் என அவர்கள் கூறினர்.

பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 8ம் தேதியன்று இரவு முதல் நாடு முழுவதும் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். அதை தொடர்ந்து, ரிசர்வ் வங்கி அலுவலகமும், பல்வேறு வங்கிகளின் கிளைகளும் விடுமுறையின்றி தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. கடந்த சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் (நவ.12, 13) வங்கிக் கிளைகள் இயங்கின.

இந்நிலையில், சென்னை ரிசர்வ் வங்கி அலுவலகம் இன்று இயங்காது எனவும், இனி திங்கள்கிழமைதான் வங்கி இயங்கும் எனவும் வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர். அன்று ரூபாய் நோட்டுகளை மாற்றுவது, சில்லறை பெறுவது போன்ற பணிகளை பொதுமக்கள் மேற்கொள்ளலாம் என அவர்கள் தெரிவித்தனர்.

அதேபோல், ஒவ்வொரு மாதமும் முதலாவது, 1வது சனிக்கிழமைகளில் வங்கிக் கிளைகள் முழுவேலை நாளாக இயங்கி வருகின்றன. இந்த வகையில், இன்று 3வது சனிக்கிழமை என்பதால், வங்கிக் கிளைகள் அனைத்தும் இயங்கவுள்ளன. அவற்றில் இயல்பான பண பரிவர்த்தனைகள் நடைபெறும். பழைய நோட்டுகளை பொருத்தவரை சனிக்கிழமை, மூத்த குடிமக்களுக்கு மட்டுமே அவை மாற்றித் தரப்படும்.

ஆனால், நாளை ஞாயிற்றுக்கிழமை பொது விடுமுறை என்பதால் அன்றைய தினம் வங்கிகள் செயல்படுமா அல்லது விடுமுறையா என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியிடப்படவில்லை. இதற்கான அறிவிப்பு இன்று மாலைவெளியாகும் என கூறப்படுகிறது.