Pariksha Pe Charcha 2023:மாணவர்களுடன் பிரதமர் மோடி பரிக் ஷா இ சார்ச்சா நிகழ்ச்சியில் இன்று கலந்துரையாடல்

மாணவர்களின் தேர்வு பயம் போக்கும் நோக்கில் மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுடன் பரிக் ஷா இ சார்ச்சா நிகழ்ச்சியில் இன்று பிரதமர் மோடி கலந்துரையாடுகிறார்.

Today at the Pariksha Par Charcha event, PM Modi will engage with schoolchildren,teachers, and parents.

மாணவர்களின் தேர்வு பயம் போக்கும் நோக்கில் மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுடன் பரிக் ஷா இ சார்ச்சா நிகழ்ச்சியில் இன்று பிரதமர் மோடி கலந்துரையாடுகிறார்.

கடந்த 2018ம் ஆண்டில் இருந்து பிரதமர் மோடி பரிக்ஷா இ சர்ச்சா என்ற பெயரில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுடன் கலந்துரையாடி அவர்களுக்கு அறிவுரைகளை வழங்கி வருகிறார். அதில் தேர்வு பயம் போக்குவது எவ்வாறு, அதிலிருந்து எவ்வாறு மீள்வது, மனஅழுத்தமின்றி தேர்வு எழுதுவது குறித்து பிரதமர் மோடி ஆலோசனை வழங்குகிறார்.

Today at the Pariksha Par Charcha event, PM Modi will engage with schoolchildren,teachers, and parents.

ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் பிபிசி-யின் பிரதமர் மோடி ஆவணப்படம் ஒளிபரப்பு:ஏபிவிபி பதிலடி

இந்நிலையில் 2023ம் ஆண்டுக்கான பரிக்ஷா இ சார்ச்சா நிகழ்ச்சி இன்று காலை 11 மணிக்கு நடக்கிறது. இது குறித்து பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ நம்முடைய தேர்வு எழுதும் வீரர்கள் தேர்வுகளை அழுத்தமின்றி எழுதுவது குறித்து ஆலோசிக்க வாய்ப்புகளை உருவாக்கும், ஆதரவு அளிக்கும் வகையில் பரிக்ஷா இ சார்ச்சா நிகழ்ச்சி இன்று நடக்கிறது.” எனத் தெரிவித்துள்ளார்.

6-வது ஆண்டு பரிக்ஷா இ சர்ச்சாவுக்கான முன்பதிவு செய்யும் அவகாசம் கடந்த ஆண்டு நவம்பர் 25ம் தேதி தொடங்கி டிசம்பர் 30ம் தேதி முடிந்தது. இருப்பினும் இன்றுவரை விண்ணப்பிக்க அவகாசத்தை கல்வி அமைச்சகம் வழங்கியுள்ளது. 

மத்திய கல்வித்துறை அமைச்சகத்தின் அறிவிப்பின்படி, “2022ம் ஆண்டைவிட, 2023ம் ஆண்டில் அதிகமான மாணவர்கள் முன்பதிவு செய்துள்ளனர். இந்த ஆண்டு 38.80 லட்சம் பேர் முன்பதிவு செய்தனர். இதில் 31.24லட்சம் மாணவர்கள், 5.60 லட்சம் ஆசிரியர்கள், 1.95 லட்சம் பெற்றோர் அடங்குவர். கடந்த 2022ம் ஆண்டில் 15.70 லட்சம் பேர் முன்பதிவு செய்திருந்தார்கள்

Today at the Pariksha Par Charcha event, PM Modi will engage with schoolchildren,teachers, and parents.

150 நாடுகளி்ல் இருந்து மாணவர்கள், 51 நாடுகளில் இருந்து ஆசிரியர்கள், 50 நாடுகளி்ல் இருந்து பெற்றோர் 2023ம் ஆண்டு பரிக்ஷா இ சார்ச்சாவுக்கு முன்பதிவு செய்திருந்தார்கள்.

மூக்கு வழி கொரோனா தடுப்பு மருந்தை அறிமுகம் செய்து வைத்தார் மத்திய அமைச்சர்

இது தவிர மாநிலக் கல்வி வாரியம், சிபிஎஸ்இ, கேந்திரியா வித்யாலயா பள்ளி, நவோதயா பள்ளிகளில் இருந்தும் மாணவர்கள் பங்கேற்க ஆர்வம் தெரிவித்தனர். ஆசிரியர்கள், பெற்றோரும் அதிக அளவில் பங்கேற்க  ஆர்வம் தெரிவித்திருந்தார்கள்.

Today at the Pariksha Par Charcha event, PM Modi will engage with schoolchildren,teachers, and parents.

போட்டித்திறன் தேர்வு மூலம் 2500 பங்கேற்பார்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பிரதமர் மோடி எழுதிய எக்ஸாம் வாரியர் புத்தகம் ஆங்கிலம், இந்தியில் தரப்படும், சான்றிதழும் வழங்கப்படும். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios