மூக்கு வழி கொரோனா தடுப்பு மருந்தை அறிமுகம் செய்து வைத்தார் மத்திய அமைச்சர்
நாட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மூக்கு வழியாக செலுத்தப்படும் “இன்கோவாக்” தடுப்பு மருந்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று அறிமுகம் செய்து வைத்தார்.
கொரோனா தொற்று பாதிப்பை தடுப்பதற்காக கோவாக்சின் தடுப்பூசியை பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்து நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு தடுப்பூசியாக செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் ஊசி அல்லாமல் மூக்க மூலமாக செலுத்தும் தடுப்பு மருந்தையும் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த மருந்தை 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்த மத்திய அரசு கடந்த செப்டம்பர் மாதத்தில் அவசரகால அனுமதியை வழங்கி இருந்தது.
தமிழ் தாய் வாழ்த்து பாடலுடன் தொடங்கிய ஆளுநரின் தேநீர் விருந்து; முதல்வர் பங்கேற்பு
மேலும் மூக்கு வழியாக செலுத்தும் தடுப்பு மருந்தை மூன்றாவது தவணையாக அதாவது பூஸ்டர் டோசாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மத்திய அரசு ஏற்கனவே தெரிவித்திருந்தது. முதல் கட்டமாக இந்த மருந்து தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே செலுத்தப்படும், அரசு சார்பில் கொள்முதல் செய்யப்படும் பட்சத்தில் அரசு மருத்துவமனைகளிலும் இந்த மருந்து விநியோகிக்கப்படும் என்று பாரத் பயோடெக் நிறுவனம் சார்பில் தெரிவித்திருந்தது.
125 அடி ராஜகோபுரத்தில் ஏற்றப்பட்ட கொடி; தேசிய கொடிக்கு மரியாதை செலுத்திய யானை
இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா குடியரசு தினத்தை முன்னிட்டு மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்தான “இன்கோவாக்” மருந்தை டெல்லியில் அறிமுகம் செய்து வைத்தார். மேலும் இந்த மருந்தானது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.