To protect Malayalam actresses Comes with Lady Black Gats

மலையாளத் திரை உலகில் நடிகைகளின் பாதுகாப்புக்காக பெண்களைக் கொண்ட ‘கருப்பு பூனைப்படை’ அமைக்க மலையாளம் சினிமா தொழில்நுட்ப கலைஞர்கள் அமைப்பு முடிவு செய்துள்ளது.

பெண் கருப்பு பூனைப்படையில் இருக்கும் பெண்களுக்கு, தற்காப்பு கலைகளான கராத்தே, கேரளாவின் பாரம்பரிய தற்காப்பு கலையான களரிபாயாட்டு ஆகியவற்றில் பயிற்சி அளிக்கப்படும்.

இந்த பயிற்சி பெற்ற ‘பெண் கருப்பு பூனைப்படைகள்’ நடிகைகளுக்கு பாதுகாப்பாக அவர்கள் படப்படிப்பு நடக்கும் இடங்களுக்கு செல்வார்கள். இவர்களுக்கு வாகனம் ஒட்டும் பயிற்சியும் அளிக்கப்பட்டு, நடிகைகளுக்கு பிரத்யேக பாதுகாப்புக்காகவும் அமர்த்தப்படுவார்கள்.

மலையாளத் திரையுலகில் எதிர்காலத்தில் ஏற்படும் தேவைக்கு ஏற்ப பெண் கருப்பு பூனைப்படையில் அதிகமாக பெண்கள் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.

இது குறஇத்து மலையாளம் சினிமா தொழில்நுட்ப கலைஞர்கள் அமைப்பின் பொதுச்செயலாளர் பைஜூகொட்டாரக்கரா கூறுகையில், “ மலையாள நடிகை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட நிகழ்வுக்கு பின் நடிகைகளின் பாதுகாப்புக்காக பெண்களைக் கொண்ட கருப்புபூனைப்படையை அமைக்க முடிவு செய்துள்ளோம். இதற்காக திரையுலக சண்டைப்பயிற்சி பிரிவினர் இந்த படையில் ேசரும் பெண்களுக்கு 6 மாதம் தற்காப்பு கலையில் தீவிர பயிற்சி அளிக்க உள்ளனர்’’ என்றார்.