திருப்பதியில் இந்த தினங்களில் அனைத்து தரிசனமும் ரத்து.. 12 மணி நேரம் கோவில் மூடல்.. என்ன காரணம் தெரியுமா..?
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சூரிய கிரகணம், சந்திர கிரகணத்தையொட்டி பிரேக், சிறப்பு உள்ளிட்ட தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் அன்றைய தினங்களில் 12 மணிநேரம் நடை சாத்தப்படுகிறது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சூரிய கிரகணம், சந்திர கிரகணத்தையொட்டி பிரேக், சிறப்பு உள்ளிட்ட தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் அன்றைய தினங்களில் 12 மணிநேரம் நடை சாத்தப்படுகிறது.
சூரிய கிரகணம் இந்த மாதம் 25 ஆம் தேதியும், சந்திர கிரகணம் அடுத்த மாதம் 8 ஆம் தேதியும் வருகிறது. அதன்படி, சூரிய கிரணம் மாலை 5.11 மணி முதல் 6.27 மணி வரை நிகழ்கிறது. இதனால் அன்று காலை 8.11 மணி முதல் இரவு 7.30 மணி வரை திருப்பதி கோவில் நடை சாத்தப்படுகிறது.
மேலும் படிக்க:nirmala sitaraman:அடுத்த ஆண்டு பட்ஜெட் எப்படி இருக்கும்? நிர்மலா சீதாராமன் சூசகம்
மேலும் விஜபி பிரேக் தரிசனம், ஸ்ரீவாணி, சிறப்பு தரிசனம், பிற ஆர்ஜித சேவை ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளது. சர்வதரிசன பக்தர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.அதேபோல் நவம்பர் 8 ஆம் தேதி பிற்பகல் 2.39 மணி முதல் 6.27 மணி வரை சந்திர கிரகணம் நிகழுவதால், அன்று காலை 8.40 மணி முதல் இரவு 7.20 மணி வரை நடை சாத்தப்படுகிறது. அதேபோல் சர்வதரிசன பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது.
சூரிய மற்றும் சந்திர கிரகண நாட்களில் கிரகணம் முடியும் வரை சமைப்பதில்லை என்பதால், குறிப்பிட்ட தினங்களில் மாத்ருஸ்ரீ தரிகொண்டா வெங்கமாம்பா மற்றும் வைகுந்தம் கியூ வளாகத்தில் அன்னபிரசாதம் வழங்கப்படாது என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. எனவே, திருமலைக்கு வர திட்டமிட்டுள்ள பக்தர்கள் இதனை கருதில் கொண்டு வருமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க:இருமல் மருந்து விவகாரம்: மெய்டன் மருந்து நிறுவனம் விளக்கம் அளிக்க ஹரியானா மருந்து கட்டுப்பாடு அமைப்பு நோட்டீஸ்