nirmala sitaraman:அடுத்த ஆண்டு பட்ஜெட் எப்படி இருக்கும்? நிர்மலா சீதாராமன் சூசகம்

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக் கட்டமைப்பை பராமரிக்க அடுத்த ஆண்டு பட்ஜெட் கவனமாக கட்டமைக்கப்படும் என்று மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் சூசகமாகத் தெரிவித்தார்

How will the budget for next year look?  Nirmala Sitharaman twist

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக் கட்டமைப்பை பராமரிக்க அடுத்த ஆண்டு பட்ஜெட் கவனமாக கட்டமைக்கப்படும் என்று மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் சூசகமாகத் தெரிவித்தார்

உலக வங்கி, சர்வதேச செலவாணி நிதியம் ஆகிய சார்பில் நடக்கும் ஆண்டு கூட்டத்தில் பங்கேற்க மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் அமெரி்க்கா சென்றுள்ளார். வாஷிங்டன் டிசி நகரில் உள்ள ப்ரூக்கிங் இன்ஸ்டியூட்டில்  நடந்த கூட்டத்தில் கேள்விகளுக்கு மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்தார். 

இந்தியாவுக்கு பாராட்டு!உலகப் பொருளாதார வளர்ச்சியை குறைத்தது செலாவணி நிதியம்(IMF)

How will the budget for next year look?  Nirmala Sitharaman twist

அப்போது அவரிடம் அடுத்த நிதியாண்டு பட்ஜெட் குறித்து பொருளாதார வல்லுநர் ஈஸ்வர் பிரசாத் கேள்வி எழுப்பினார். அதற்கு அவர் பதில் அளிக்கையில் “  இப்போதுள்ள நிலையில் அடுத்த ஆண்டு பட்ஜெட் தயாரிப்பு மிகக் கடினமானதாக இருக்கும்,

ஆனால் அதை இப்போதே எப்படி இருக்கும் என்பது கணிக்க முடியாது. பரந்த அளவில் கூறினால், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஊக்கப்படுத்தும் காரணிகளுக்குத்தான் அதிகமான முக்கியத்துவம் வழங்கப்படும். பணவீக்கம் எனக்கு பல்வேறு கவலைகளை ஏற்படுத்தினாலும், அதை சரி செய்து குறைக்க வேண்டிய கடமை இருக்கிறது. ஆனால், பணவீக்கத்தை வைத்துக்கொண்டு பொருளாதார வளர்ச்சியை பராமரிப்பது என்பது இயல்பாக எழும் கேள்விதான்.

பணவீக்கம், பொருளதார வளர்ச்சி இவை இரண்டையும் எவ்வாறு சமாளிக்கப் போகிறீர்கள், சமநிலையை எட்டப்போகிறீர்கள் என்பது முக்கியம்.பெருந்தொற்று பாதிப்பிலிருந்து இந்தியப் பொருளாதாரம் மீண்டு வந்துவிட்டது, அடுத்த ஆண்டு வளர்ச்சியைத் தக்க வைக்க வேண்டும். இந்தியாவை நம்பி முதலீட்டில் இறங்கியுள்ள பல பன்னாட்டு நிறுவனங்களை பலவீனப்படுத்திவிட முடியாது. ஆதலால் மிகுந்த கவனத்துடன் பட்ஜெட்டை கட்டமைப்போம், வளர்ச்சியை நிலைநிறுத்த அதிகமாக முக்கியத்துவம் அளிப்போம்.

How will the budget for next year look?  Nirmala Sitharaman twist

ஐ.டி. இளைஞர்களே அலர்ட்! 12 ஆயிரம் பேரை வேலைக்கு எடுக்கிறது டிசிஎஸ் நிறுவனம்

உலகளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை, உக்ரை ரஷ்யா போர், வட்டிவீதம் இந்தியாவையும் பாதித்துள்ளது. எரிபொருள், உரம், உணவு ஆகியவற்றின் விலை அதிகரித்துள்ளது. இவற்றைக் கருத்தில் கொண்டு கவனத்துடன் பட்ஜெட் உருவாக்கப்படும். ஆனால் ஒன்று மட்டும் உறுதியாகக் கூறுகிறேன், மக்களுக்கு எந்தவிதமான அழுத்ததமும் கடத்தப்படாது. 

கடந்த ஆண்டு ஒருமுறையும், இந்த ஆண்டு ஜூன் மாதமும் பெட்ரோல், டீசலுக்கான உற்பத்தி வரி குறைக்கப்பட்டுள்ளது. அதிகரித்துவரும் கச்சா எண்ணெய் விலையின் சுமையை சாமானிய மக்கள் தாங்க முடியாது. அதனால்தான் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ள மக்களுக்கு எந்தவிதமான சிரமமும் வரக்கூடாது என்பதில் கவனமாக இருப்போம்” எனத் தெரிவித்தார்

அடுத்த நிதி ஆண்டுக்கான(2023-24) பட்ஜெட் தயாரிப்பு பணியை தொடங்கியது மத்திய அரசு

ஆத்மநிர்பார் பாரத் குறித்த கேள்விக்கு நிர்மலா சீதாராமன் பதில் அளித்தார் அவர் கூறுகையில் “ ஆத்மநிர்பார் பாரத் என்பது தன்னம்பிக்கை கொள்கை மட்டும். யாரையும் தனிமைப்படுத்துதலோ அல்லது பாதுகாப்புவாதமோ அல்ல. 

பிரதமர் மோடி தலைமையிலான அரசு கொண்டு வந்த ஆத்மநிர்பார் பாரத் திட்டத்தை தவறாக புரிந்துகொண்டார்கள். இந்தியா தனது ஜிடிபியில் உற்பத்தி துறையின் பங்களிப்பை அதிகப்படுத்த விரும்புகிறது, இளைஞர்களுக்கும், திறன்மிகு தொழிலாளர்களுக்கும், திறன்குறைவு தொழிலாளர்களுக்கும் வேலைவாய்ப்பு வழங்கும் திட்டம்தான். கட்டுமானத்துறையை ஊக்கப்படுத்தும் போது, திறமைற்ற தொழிலாளர்களுக்கும் வேலைகிடைக்கும். 

சாலை மற்றும் நெடுஞ்சாலைக் கட்டுமானம் வேகமாகியுள்ளது, துறைமுகம், ரயில்போக்குவரத்து வசதி வலுவடைந்திருக்கிறது.  உலகளவில் உற்பத்தி முனையாக இந்தியா மாறுவதற்கு தனியார் துறைக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளை உருவாக்க முதலீடு செய்துள்ளது.
இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios