உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர், வாழ்வாதாரச் செலவுஉயர்வு, பொருளாதார மந்தநிலை ஆகியவற்றால், உலகப் பொருளாதார வளர்ச்சி அடுத்த ஆண்டில் மேலும் குறைய வாய்ப்பு உள்ளது, ஆனால், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக இருக்கிறது என்று சர்வதேச செலவாணி நிதியம்(ஐஎம்எப்) தெரிவித்துள்ளது.
உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர், வாழ்வாதாரச் செலவுஉயர்வு, பொருளாதார மந்தநிலை ஆகியவற்றால், உலகப் பொருளாதார வளர்ச்சி அடுத்த ஆண்டில் மேலும் குறைய வாய்ப்பு உள்ளது, ஆனால், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக இருக்கிறது என்று சர்வதேச செலவாணி நிதியம்(ஐஎம்எப்) தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் உலக வங்கி, சர்வதேச செலவாணி நிதியம் ஆகிய சார்பில் ஆண்டு கூட்டம் நடந்து வருகிறது. இதில் உக்ரைன் ரஷ்யா இடையிலான போர், கொரோனா தொற்றால் உலகப் பொருளதார பாதிப்பு, பணவீக்கம், பொருளாதார மந்தநிலை, உலக நாடுகளில் மத்திய வங்கிகள் வட்டிவீத அதிகரிப்பால் ஏற்படும் பொருளாதார சுணக்கம் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது

இதில் நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.4 சதவீதமாக இருக்கும் என்று முன்பு சர்வதேச நிதியம் மதிப்பிட்டிருந்தது. ஆனால், இந்தியாவில் நிலவும் பணவீக்கம், வட்டிவீத அதிகரிப்பு ஆகியவற்றால் பொருளாதார வளர்ச்சியை 60 புள்ளிகள் குறைத்து, 6.8சதவீதமாக வளர்ச்சியை குறைத்துள்ளது. ஆனால், 2023-24ம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.1 சதவீதமாக இருக்கும் என்ற முன்பு வெளியிட்ட கணிப்பை மாற்றவில்லை.
ஆனால், வளர்ச்சி அடைந்த நாடுகள் மற்றும் வளர்ந்து வரும் நாடுகளில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிதான் சிறப்பாகவும், அதிகமாக இருக்கிறது என்றும் சர்வதேச செலவாணி நிதியம் பாராட்டியுள்ளது.
ஐஎம்எப் தலைமைப் பொருளாதார வல்லுநர் பியரி ஆலிவர் கோரின்சஸ் நிருபர்களிடம் கூறுகையில் “ 2022ம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதாரம் சிறப்பாகச் செயல்படுகிறது. 2023ம் ஆண்டில் பொருளாதாரம் வலுவாக வளரும் என்று எதிர்பார்க்கிறோம்.

நடப்பு நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் 6.8% வளர்ச்சி அடையும் என்றும், 2023ம் ஆண்டில் 6.1% வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கிறோம். ஆனாலும், இந்தியாவில் பணவீக்கம் குறையவில்லை.ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டு அளவுக்கு அதிகமாகவே பணவீக்கம் தொடர்ந்து வருகிறது.

கொரோனா தொற்றிலிருந்து உலகப் பொருளாதாரம் இன்னும் முழுமையாக மீளவில்லை. கொரோனா தொற்றுக்குப்பின் உலகப் பொருளாதாரத்தின் பாதிப்பு பாதியளவுதான் சரி செய்யப்பட்டுள்ளது.
ஐ.டி. இளைஞர்களே அலர்ட்! 12 ஆயிரம் பேரை வேலைக்கு எடுக்கிறது டிசிஎஸ் நிறுவனம்
ரஷ்யா உக்ரைன் இடையிலான போர், பொருளாதார மந்தநிலை, வாழ்வாதாரச் செலவு அதிகரிப்பு, பணவீக்கம் ஆகியவற்றால் உலகப் பொருளாதார வளர்ச்சி 2023ம் ஆண்டில் 2.7 சதவீதமாகக் குறையும். நடப்பு ஆண்டில் உலகப் பொருளாதார வளர்ச்சி 3.2 சதவீதமாக இருக்கும் என்பதில் மாற்றமில்லை.

உலகளவில் பொருளாதார மந்தநிலைக்கான மோசமான காலம் இன்னும் வரவில்லை, மக்களில் பெரும்பாலானோர் பொருளாதார மந்தநிலை பாதிப்பை எதிர்கொண்டு வருகிறார்கள் “ எனத் தெரிவித்தார்
சிமெண்ட் உற்பத்தியில் அதானி குழுமம் ஆதிக்கம்: கடனில் தத்தளிக்கும் முக்கிய நிறுவனத்தை வாங்க திட்டம்
2023ம் ஆண்டில் உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சியை சர்வதேச செலவாணி நிதியம் கணித்ததில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.1 சதவீதம்தான் அதிகமாகும். சீனா 4.4 சதவீதமும், அமெரிக்கா வெறும் ஒரு சதவீதம்தான் வளரும் என மதிப்பிட்டுள்ளது.
ஆசியாவில் சீனாவின் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் 3.2 சதவீதமாக வீழ்ச்சி அடையும் என்றும் 2023ம் ஆண்டில் 4.4 சதவீதமாக வளர்ச்சி அடையும் என ஐஎம்எப் கணித்துள்ளது. ஆனால், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் 6.8 சதவீதமாகவும், அடுத்த ஆண்டில் 6.1 சதவீதமாக வளரும் என்று கணித்துள்ளதன் மூலம் சீனாவின் பொருளதார வளர்ச்சியைவிட இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் எனத் தெரிவித்துள்ளது.
ராகுல் காந்தியுடன் போட்டிபோட்டு தண்டால் பயிற்சி எடுத்த காங்கிரஸ் தலைவர்கள்: வைரல் வீடியோ
சீனாவின் பொருளாதாரம் கடந்த ஆண்டு 8.1 சதவீதமாக இருந்த நிலையில் நடப்பு ஆண்டில் 3.2 சதவீதமாக வீழ்ச்சி அடையும் என்று ஐஎம்எப் கணித்துள்ளது.
