டிக் டாக் மூலம் பிரபலமான, கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த, 9 வயது குழந்தை ஆருணி,  என்பவர் உடல் நல குறைவு காரணமாக மரணமடைந்துள்ள சம்பவம் அப்பகுதி, மக்களை மட்டும் இன்றி ரசிகர்கள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஆருணி, நீண்ட நாட்களாக பல மலையாள பாடல்கள் மற்றும் மலையாள பட வசனங்களுக்கு தகுந்த போல், அழகான அசைவுகள் மூலம் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி அதனை டிக் டாக்கில் வெளிப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் இவருக்கு, சில தினங்களாக விடாத காய்ச்சல் மற்றும் தீராத தலைவலி இருந்து வந்துள்ளது. இதனால் ஆருணி அவருடைய குடும்பத்தினர் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்துள்ளனர். ஆனால் நோயின் தீவிரம் குறைந்தபாடில்லை. 

தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர், திடீரென உயிரிழந்தார். இவருடைய மறைவு, பலரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் ஆருணியின் தந்தை, கடந்த சில மாதங்களுக்கு முன் வெளிநாட்டில் நடந்த விபத்து ஒன்றில் மரணமடைந்தார் என்கிற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.