Asianet News TamilAsianet News Tamil

#UnmaskingChina: திபெத்தில் இப்படித்தான் செஞ்சது சீனா.. இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்த திபெத் தலைவர்!

‘திபெத் என்பது சீனாவின் பாதம். அதை நாங்கள் கைப்பற்றிவிட்டோம். இனி பாதத்தின் ஐந்து விரல்களை கைப்பற்ற வேண்டும்.’ என்று சொன்னார். திபெத்தின் ஐந்து விரல்கள் என்பது லடாக், நேபாளம், பூட்டான், சிக்கிம், அருணாசலப்பிரதேசம் ஆகிய ஐந்து பகுதிகள்தான். இந்த ஐந்தையும் சீனாவுக்குள் கொண்டு வருவதே சீனர்களின் நோக்கம். 

Tibet President Warns india in china's strategy
Author
Delhi, First Published Jun 19, 2020, 9:37 PM IST

60 ஆண்டுகளுக்கு முன்பு திபெத்துக்கு சீனா என்ன செய்ததோ அதையேத்தான் இப்போது இந்தியாவில் செய்கிறது. இது தொடக்கம்தான் என்று திபெத் தலைவர் லோப்சாங் சங்கே இந்தியாவை எச்சரித்துள்ளார்.Tibet President Warns india in china's strategy
இந்தியாவின் லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய வீரர்கள் மீது சீன படையினர் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்திய வீரர்களின் பதில் தாக்குதலில் 43 சீன வீரர்கள் பலியானதாகக் கூறப்படுகிறது. இதனால், இந்தியா - சீனா எல்லையில் போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் திபெத் தலைவர் லோப்சாங் சங்கே இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்து தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
 இதுதொடர்பாக அவர் விடுத்திருக்கும் தகவலில், “லடாக்கில் சீனா மேற்கொண்ட அத்துமீறல் என்பது எதிர்பார்த்த ஒன்றுதான். சீனாவின் தந்திரங்களில் இதுவும் ஒன்று. இந்தத் தந்திரத்தை ‘திபெத் உத்திகளின் ஐந்து விரல்கள்’ ( Five Fingers of Tibet strategy) என்று கூறுவார்கள். திபெத்துக்கு எதிராக சீனா தலைவர் மாசே துங் இந்த விதியைதான் பயன்படுத்தினார். அப்படித்தான் சீனர்கள் திபெத்தை ஆக்கிரமித்தார்கள். அன்று எங்களுக்கு நடந்ததுதான் இன்று இந்தியாவுக்கும் நடக்கிறது.Tibet President Warns india in china's strategy
திபெத்தை முழுமையாக சீனா ஆக்கிரமிப்பு செய்த பிறகு மாசே துங் ஒரு வார்த்தையைக் கூறினார். ‘திபெத் என்பது சீனாவின் பாதம். அதை நாங்கள் கைப்பற்றிவிட்டோம். இனி பாதத்தின் ஐந்து விரல்களை கைப்பற்ற வேண்டும்.’ என்று சொன்னார். திபெத்தின் ஐந்து விரல்கள் என்பது லடாக், நேபாளம், பூட்டான், சிக்கிம், அருணாசலப்பிரதேசம் ஆகிய ஐந்து பகுதிகள்தான். இந்த ஐந்தையும் சீனாவுக்குள் கொண்டு வருவதே சீனர்களின் நோக்கம். 2017-ம் ஆண்டில் டோக்லாம் பகுதியில் நடந்த சண்டையும், தற்போது லடாக்கில் ஏற்பட்டுள்ள சண்டைக்கும் இதுதான் காரணம். 60 ஆண்டுகளுக்கு முன்பு திபெத்துக்கு சீனா என்ன செய்ததோ அதையேத்தான் இப்போது இந்தியாவில் செய்கிறது. இது தொடக்கம்தான்.Tibet President Warns india in china's strategy
லடாக்கில் கை வைத்த சீனா சீக்கிரமே சிக்கிம், அருணாசலப்பிரதேசம் பக்கமும் வரும். பாதம் எனும்  திபெத்தை வளைத்துவிட்ட சீனர்கள், தற்போது விரல்களை நோக்கி வருகிறார்கள். எனவே, இந்தியா எதற்கும் தயாராக இருக்க வேண்டும். இந்தியா என்ன செய்தாவது அவர்களுடைய நிலப்பரப்பை காக்க வேண்டும். இதற்கெல்லாம் பேச்சுவார்த்தை மட்டுமே தீர்வாக அமையும். பேச்சுவார்த்தை மூலம் இந்தியா தனது நிலத்தை மீட்க முடியும்.” என்று லோப்சாங் சங்கே தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios