கர்நாடக மாநிலம் மாண்டியா தொகுதியில், தற்போதைய முதலமைச்சர் குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமியை எதிர்த்து, சுயேச்சையாக போட்டியிடுபவர், மறைந்த நடிகரும், அரசியல்வாதியுமான அம்பரீஷின் மனைவி சுமலதா.

இவர் தற்போது சூடு பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ஏற்கனவே சுமலதாவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த நடிகர் யாஷ்க்கு, மற்றொரு முக்கிய கட்சியில் இருந்து கொலை மிரட்டல் வந்ததாக தெரிவித்தார். ஆனால் இதுபோன்ற மிரட்டல்களுக்கு தான் பயப்பட போவதில்லை என்றும் தொடர்ந்து சுமலதாவிற்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளதாகவும் கூறினார். 

இந்நிலையில் தன்னுடைய உயிருக்கும், குடும்பத்தினர் உயிருக்கும் ஆபத்து உள்ளதாகவும், பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது என சுமலதா தெரிவித்துள்ளார்.

மேலும் பிரச்சாரத்தின் இறுதி நாளான நாளை,  தன் மீது கல்வீசி தாக்குதல் நடத்த சிலர் திட்டமிட்டுள்ளதாகவும், தன்னை எதிர்த்து போட்டியிட உள்ள முதலமைச்சர் குமாரசாமியின் மகன் நிகில் தோற்று விடுவார் என்கிற பயத்தில் குமாரசாமி எதிர்கட்சியினரை, அச்சுறுத்தி வருகிறார். இதனால் தன்னுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதை உணர்வதாக பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.