பிரதமர் மோடி தாய்லாந்து நாட்டு மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூல் பதிப்பினை இன்று வெளியிட்டார். உலகப் பொதுமறையாம் திருக்குறளை தாய்லாந்து மொழியில் வெளியிடுவது தமக்க பெருமையான உள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.
பிரதமர் மோடி அண்மைக்காலமாக தமிழ் மொழி மீது மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார். அமெரிக்காவில் உரையாற்றும்போது யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற தமிழ் முதுமொழியை சுட்டிக் காட்டி பேசினார்.
சீன அதிபரை தமிழகத்தில் வைத்து சந்தித்தது என பல விஷயங்களில் மோடி தமிழகத்தை டார்கெட் செய்து வருகிறார் என்பது வெளிப்படையாக தெரிகிறது. அதே நேரத்தில் தமிழகம் மீதான மோடியின் ஈர்ப்பு அவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்துள்ளது
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தாய்லாந்து நாட்டில் 3 நாள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக இன்று டெல்லி விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் தாய்லாந்து சென்றடைந்தார்.
அங்கு அந்நாட்டின் தலைநகர் பாங்காக் நகரில் சென்றிறங்கிய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து, நட்சத்திர ஓட்டலுக்கு சென்ற பிரதமர் மோடியை இந்திய வம்சாவளியினர் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
தாய்லாந்தில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு மொழியில், மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறள் நூல் பதிப்பினை இன்று வெளியிட்டார்.. இதேபோன்று இந்த நிகழ்ச்சியில் சீக்கிய மதகுருவான குரு நானக் தேவின் 550வது ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு அதனை குறிக்கும் வகையிலான நினைவு நாணயம் ஒன்றையும் வெளியிட்டார்.
தாய்லாந்து மொழியில் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது தமிழர்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துதியுள்ளது.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Nov 2, 2019, 8:58 PM IST