இந்திய ராணுவத்தில் 30 பெண்கள் சேர்ப்பு: 4 ஆண்டு உழைப்புக்குக் கிடைத்த வெற்றி!
ராணுவ செவிலியர் பணிக்காகப் பயிற்சி பெற்ற முப்பது பெண் செவிலியர்கள் இந்திய ராணுவத்தில் பணியாற்ற தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள ராணுவ மருத்துவப் படை அலுவலகத்தில் வைத்து 30 புதிய பெண் செவிலியர்கள் ராணுவத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டனர். இந்நிகழ்ச்சியில் ராணுவ மேஜர் ஜெனரல் பங்கஜ் ராவ், பிரிகேடியர் ஆர். ஜெயந்தி, கர்னல் எஸ். கீதா ஆகியோர் கலந்துகொண்டனர்.
கடந்த நான்கு ஆண்டுகளாக குக் கிராமங்கள், ராணுவ மருத்துவமனைகளில் பணியாற்றியும், கொரோனா பெருந்தொற்று காலத்தில் மருத்துவ சேவை புரிந்தும் ராணுவ செலிவியருக்கான பயிற்சி பெற்றுவந்த பெண் செவிலியர்கள் 30 பேர் இந்த நிகழ்ச்சியில் ராணுவத்தில் இணைந்தனர். இவர்கள் நர்சிங் ஆஃபீசர் என்ற பொறுப்பில் பணியாற்ற உள்ளனர்.
பயிற்சி காலத்தில் சிறப்பாக செயல்பட்டு பதக்கங்கள் பெற்றவர்களைப் பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டன. ராணுவப் பணியில் சேர்வது பற்றி இறுதித் தேர்வில் முதல் இடம் பெற்ற திவ்யா சர்மா கூறுகையில், "மிலிட்டரி நர்சிங்கில் சேர்வதுதான் எனது கனவாக இருந்தது. என் அண்ணன் முனிஷ்தான் என்னை ஊக்கப்படுத்தினார்." என்று தெரிவித்தார்.
ஒரு லட்சம் பேர் சாவு! சாலை விபத்துகளில் அதிகம் பலியாகும் பாதசாரிகள்!
"என் தாத்தா நந்தன் மெஹ்ராவும் அப்பா ராஜேஷ் மெஹ்ராவும் ராணுவத்தில் பணியாற்றியவர்கள். எனவே எனக்கு இயல்பிலேயே ராணுவத்தில் சேரவேண்டும் என்ற ஆர்வம் இருந்தது" என்கிறார் பாவனா மெஹ்ரா.
"என் தாத்தா மஹிதாப் சிங் ராவ் பாதுகாப்புப் படையில் இருந்தவர். எனக்கும் ராணுவத்தில் பங்கு பெறவேண்டும் என்ற ஆசை வந்தது. என் ஆசைக்கு இந்த நர்சிங் பணி ரொம்பவே பொருத்தமானது" என்று மகிழ்ச்சியுடன் சொல்கிறார் ஆயுஷி ராவ்.
தன்வீர் கவுரின் தந்தை மஞ்சிந்தர் சிங்கும் யுக்யதா யாதவின் தந்தை ஹனுமான் சிங் யாதவும் விமானப் படையில் பணிபுரிந்தவர்வர்கள்.
4000 கி.மீ.! உலகின் நீண்ட நீர்வழிப்பாதையைத் தொடங்கிவைக்கிறார் பிரதமர் மோடி