4000 கி.மீ.! உலகின் நீண்ட நீர்வழிப்பாதையைத் தொடங்கிவைக்கிறார் பிரதமர் மோடி
காசி முதல் திப்ருகார் வரை 4 ஆயிரம் கி.மீ. தொலைவுக்கு நீர்வழிப்பாதையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி வரும் 13ஆம் தேதி 4 ஆயிரம் கி.மீ. தொலைவுக்கு நீளும் நீர்வழிப்பாதைப் போக்குவரத்தைத் தொடங்கிவைக்கிறார்.
உத்தரப் பிரதேச மாநிலத்தின் வாரணாசி மற்றும் அசாம் மாநிலத்தின் திருப்ருகார் ஆகிய நகரங்களுக்கு இடையே வங்க தேசம் வழியாக இந்த நீர்வழி வழித்தடத்தில் போக்குவரத்து நடைபெற உள்ளது.
இது ஆறுகள் வழியே செல்லும் உலகின் மிக நீளமான நீர்வழிப்பாதை அமையவுள்ளது. கங்கை, பாகீரதி, ஹூக்ளி, பிரம்புத்திரா, மேற்குக் கடற்கரை கால்வாய் வழியாக 50 நாட்கள் இந்த வழித்தடத்தில் பயணம் செய்யலாம்.
மத்திய அரசின் புத்தாண்டுப் பரிசு! மாதம் 5 கிலோ உணவு தானியங்கள்!
"இது உலக நீர்வழித்தடங்களில் தனித்துவமானது. இந்தியாவில் நீர்வழிப்பாதை சுற்றுலா வளர்ச்சி பெற்றுவருவதன் அடையாளம். மேற்கு வங்க மக்கள் இந்தப் பாதையைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்" என பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். அப்போது இந்த நீர்வழிப்பாதையில் ஜனவரி 13ஆம் தேதி முதல் பயணம் தொடங்கும் என்றும் அறிவித்தார்.
இந்தப் பாதையில் செல்லும் கப்பல் 50 முக்கிய சுற்றலாத் தலங்களை அணுகிப் பயணிக்கும். வாரணாசி கங்கா ஆரத்தி, காசிரங்கா தேசியப் பூங்கா, சுந்தரவனக் காடுகள் முதலிய இடங்களைப் பார்வையிட இந்த நீர்வழிப்பாதைப் பயணம் பயன்படும். இந்தக் கப்பல் வங்க தேசத்திலும் 1,110 கி.மீ. பயணிக்கும்.
தனியார் நிறுவனம் இந்த வழித்தடத்தில் தொடர்ந்து கப்பல்களை இயக்கும் என்று இந்திய உள்நாட்டு நீர்வழிப்பாதை அமைப்பு தெரிவித்துள்ளது.
மீண்டும் சிலிண்டர் விலை ரூ. 25 உயர்ந்தது..! ஹோட்டல்களில் உணவு பொருள் விலை அதிகரிக்க வாய்ப்பு