மத்திய அரசின் புத்தாண்டுப் பரிசு! மாதம் 5 கிலோ உணவு தானியங்கள்!

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் மாதம்தோறும் 5 கிலோ உணவு தானியங்கள் வழங்கும் திட்டம் இன்று நடைமுறைக்கு வருகிறது.
 

5kg/month food grain scheme for 81 crore people starts today

மத்திய அரசு தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் குடும்ப அட்டைதாரர்களுக்கு  மாதம்தோறும் 5 கிலோ உணவு தானியங்கள் வழங்கும் திட்டத்தை அறிவித்திருந்தது. இத்திட்டத்தின் மூலம் 81.3 கோடி பொதுமக்கள் பயன் அடைவார்கள் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

ரேஷன் கடைகளில் முறையாக இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுவதை கண்காணிக்க உணவுப் பாதுகாப்புக் கூட்டமைப்பின் அதிகாரிகள் தினமும் மூன்று ரேஷன் கடைகளுக்குச் சென்று ஆய்வு நடத்தி அறிக்கை அளிக்கவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இத்துடன் 2020ஆம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று பாதிப்பை முன்னிட்டு கொண்டுவரப்பட்ட பிரதமரின் கரீப் கல்யாண் அன்ன யோஜனா என்ற திட்டம் முடிவுக்கு வருகிறது.

கவுண்டமணி டயலாக் பேசி மோடிக்கு ஆறுதல் சொன்ன மம்தா

மத்திய உணவுத்துறை செயலாளர் சஞ்சீவ் சோப்ரா கடந்த வெள்ளிக்கிழமை இத்திட்டம் பற்றி மாநில உணவுத்துறைச் செயலாளர்களுடன் கலந்துரையாடியுள்ளார். அப்போது பயனாளிகளுக்கு உணவு தானியங்கள் வழங்குவதில் ஏதேனும் தொழில்நுட்பக் பிரச்சினை ஏற்படால் பார்த்து்கொள்ள வலியுறுத்தியுள்ளார்.

அமைச்சரகம் தரப்பிலும் மாநில அமைச்சகங்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் இத்திட்டத்தின் கீழ் உணவு தானியங்களை  ரேஷன் கடைகளுக்கு விநியோகிப்பது மற்றும் பயனாளிகளுக்கு வழங்குவதை சமூகமாக செயல்படுத்த கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது.

ஒரு லட்சம் பேர் சாவு! சாலை விபத்துகளில் அதிகம் பலியாகும் பாதசாரிகள்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios