கவுண்டமணி டயலாக் பேசி மோடிக்கு ஆறுதல் சொன்ன மம்தா
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் ஸ்டைலில் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆறுதல் சொல்லியிருக்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை காலை மறைந்த தன் தாயாருக்கு இறுதிச் சடங்குகளைச் செய்துவிட்டு, சில மணிநேரங்களில் கொல்கத்தாவில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் காணொளிக் காட்சி மூலம் பங்கேற்றார்.
அந்த நிகழ்ச்சியில் கொல்கத்தாவிலிருந்து ஜல்பைகுரி வரை வாரத்திற்கு 6 நாட்கள் இயக்கப்படும் புதிய வந்தே பாரத் அதிவிரைவு ரயில் சேவையையும், கொல்கத்தாவில் புதிய வழித்தடத்தில் இயங்கும் புதிய மெட்ரோ ரயில் சேவையையும் தொடங்கிவைத்துப் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.
அர்ப்பணிப்பின் உருவமான அம்மா! ஹீராபென் மோடி வாழ்க்கை வரலாறு
நிகழ்ச்சியில் பேசிய மம்தா, "மேற்கு வங்க மக்கள் சார்பாக உங்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இன்று உங்களுக்கு ஒரு துயரமான நாள். உங்களுடைய அம்மா என்றால் எங்களுக்கும் அம்மாதான். கடவுள் நீங்கள் தொடர்ந்து பணியாற்றுவதற்கான வலுவைக் கொடுக்கட்டும். தயவுசெய்து கொஞ்சம் ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள்" என்று பிரதமருக்கு ஆறுதல் கூறினார்.
ட்விட்டரில் எழுதிய பதிவு ஒன்றிலும், "பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களது ஆத்மா சாந்தி அடைய பிரார்த்தனை செய்கிறேன். இந்த துக்கமான தருணத்தில் அவரும் அவருடைய குடும்பத்தினரும் தினமாக இருப்பார்கள் என்று நம்புகிறேன்." என்று தெரிவித்திருக்கிறார்.
பாத யாத்திரைக்கு புல்லட் காரா? மத்திய அரசுக்கு ராகுல் பதிலடி