மும்பையில் நடந்த ருசிகர சம்பவங்கள்

மும்பை, நவ.18-

மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் கொள்ளையில் ஈடுபட்ட திருடர்கள் வீட்டில் இருந்த சிலிண்டர் உள்பட அனைத்தையும் சுருட்டியுள்ளனர். ஆனால் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை மட்டும் தொடமால் சென்று விட்டார்.

 நாஷிக் மாவட்டத்தில் உள்ள கோதி என்ற இடத்தில் வசித்து வருபவர் திலிப் ரோக்டே. இவர் அரசு நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் வீட்டிற்குள் இரண்டு நாட்களுக்கு முன் கொள்ளை சம்பவம் நடந்தள்ளது.

வீட்டில் கொள்ளையடிக்க வந்ததிருடர்கள், வீட்டில் இருந்த 10 ரூபாய், 20 ரூபாய் மற்றும் 100 ரூபாய் நோட்டுக்கள், தங்கக் காசு, பாத்திரங்கள், இரு கியாஸ் சிலிண்டர் என அனைத்தையும் அள்ளிச் சென்றுள்ளனர். ஆனால், 500 ரூபாய் மற்றம் 1000 ரூபாய் நோட்டுக்களை தொடாமல் அப்படியே வைத்துள்ளனர்.

இதேபோல் துலே மாவட்டத்தில் உள்ள துவாபூர் பகுதியைச் சே்ந்தவர் ஷாம் பாட்டீல். இவரது வீட்டிலும் சில நாட்களுக்கு முன் கொள்ளை நடந்தது. அதில், கதவை உடைத்து திருடிய திருடர்கள்,வீட்டில் இருந்த 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை அப்படியே வைத்துவிட்டு மற்ற அனைத்தையும் கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர்.

ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதில் மத்திய அரசு பல கெடுபிடுகளை நாளுக்கு நாள் வகுத்து வெளியிட்டு வருவதால், அந்த பணத்தை எடுத்து என்ன செய்வது என அதை அப்படியை விட்டுவைத்தனர். மேலும், சில்லறை வாங்குவதற்குள் பெரும் பாடுபட வேண்டியது இருக்கிறது. அதனால், திருடர்கள் சில்லரை காசுகளைக் கூட அள்ளிச்சென்று, ரூ.1000,ரூ.500 நோட்டுக்களை அப்படியை விட்டுச் சென்றனர்.